Friday 29 March 2024

எதார்த்த மனிதர்கள் .

 எதார்த்த மனிதர்கள் .

🌷👍வெளிநாட்டில்
இருந்து சென்னைக்கு வந்த
இந்தியத் தம்பதிகள், தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக, சென்னையிலுள்ள முக்கியமான வணிக வளாகத்திற்குச் சென்று, மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கிக் கொண்டு, தங்களது கார் இருக்கும் இடத்தை நோக்கிச்
சென்றனர்.
அவர்களின் எதிரே
வயதான ஒரு அம்மா கையேந்தி
நின்றார்.
அந்த அம்மாவைப் பார்த்தவுடன் வெளி நாட்டில் இருந்து வந்த பெண்ணோ, சற்று கோபத்துடன் தள்ளிப் போம்மா! என்றாள்.
ஆனால் அவளது கணவனோ, அந்த அம்மாவை அழைத்து, ஒரு நூறு ரூபாயை அந்தம்மாவின் கையில் வைத்தான்.
அந்த வயதான அம்மா, அந்த ஆண்
மகனைப் பார்த்து தலை கவிழ்ந்து கையெடுத்து
கும்பிட்டார்கள்.
அவனுக்கோ அந்த அம்மாவின் செயலைப் பார்த்து கண் கலங்கியது.
இதைப் பார்த்த
மனைவி,
கணவனைப்
பார்த்துக் கேட்டாள்,
"நீங்கள் என்ன கர்ணனின் வாரிசா?
அஞ்சோ பத்தோ கிழவிக்குப் போட்டிருக்க கூடாதா?" என்றாள்.
கணவன் சிரித்துக்
கொண்டே பதில் சொன்னான்,
"நாம் வாங்கிய பொருட்களுக்கு லட்சத்தில் செலவு செய்தோம்.
ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? என்று நீ என்னைக் கேட்கவில்லை!"
அந்த வயதான அம்மாவுக்கு, பசிக்கு சாப்பிட நூறு ரூபாய் கொடுத்தால்,
ஏன் கொடுத்தாய் என்று கேட்கிறாய்?
நம்மாலே இரண்டு வேளை அந்தம்மா சாப்பிடலாம்.
அந்த நேரத்தில் நம்மை நினைக்கும் அல்லவா?". என்றான்.
அவன் அடுத்து ஒன்றைச் சொன்னான் நண்பர்களே!
அதைத் தான் நாம் ஒவ்வொருவரும் குறித்து வைத்து பின்பற்ற வேண்டும்.
அது,
*மனிதனுக்கு மூன்று நிலை வரக் கூடும்.*
*அது என்ன தெரியுமா?'*
*'Disability' என்கிற இயலாமை...*
*'Disease' என்கிற நோய்...*
*அடுத்து 'Death' என்கிற இறப்பு...*
இந்த மூன்றும் எப்போது வரும் என்று எவராலும் சொல்ல முடியாது.
எனவே உன்னால் இயலும் போது, இல்லாதவர்களுக்கு உதவிடு!
இதன் மூலம், நமக்கு இறைவன் அந்த மூன்றையும் தள்ளிப் போடலாம்!" என்றான்.
இதனைக் கேட்ட மனைவி கண் கலங்கி நின்றாள்.
*எனவே நல்லதை நினைத்து, நல்லதை செய்வோம்!*
*நாளை நடப்பதை நாமா அறிவோம்?*
*நல்லது செய்வோரை யார் தடுத்தாலும் பாவம்!*
*முடிந்தால் நல்லது செய்வோம்!*
*முடியாவிட்டால் ஒதுங்கி அவர்களுக்காக பிரார்த்திப்போம்...*
*நலம் பெற மனதார நினைத்திடுவோம்!*
*உதவி செய்வோரை ஒருக்காலும்போய் தடுத்தலாகாது!*
*ஒருநாள் அத்தகைய உதவி நமக்கும் கூடத் தேவைப்படலாம்!*
*நம்மையும் அறியாமல் நல்லதையே செய்யப் பழகுவோம்...*
*கர்ணன் போல் இருக்க முடியா விட்டாலும் சற்று எதார்த்த மனிதராய் வாழ்வோம்*

No comments:

Post a Comment