Monday 11 March 2024

விரும்பிச் செய்யுங்கள் . .

 விரும்பிச் செய்யுங்கள் . .

_*வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே..*_
_*என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்..*_
_*செய்வதை விரும்பிச் செய்..*_
_*செய்வதை நம்பிக்கையோடு செய்.*_
நீங்கள் கடந்து வந்த படிகளை உடைக்காதீர்கள். ஒருவேளை இறங்குவதற்கு அதே படிகள் தேவைப்படலாம்.
விதி வலியது காலம் கொடியது.
உங்களுடைய தவறுகள்
மீண்டும் மீண்டும்
தவறுகளாகவே தொடர்ந்தால்,
அது தவறே அல்ல.
அது உங்களுடைய பழக்கம்
அதை விட்டொழியுங்கள்.
நேரங்கள் வாய்ப்பை உருவாக்குவதில்லை,
முயற்சிகள் தான் வாய்ப்பே உருவாக்குகின்றது,நேரத்திற்காக காத்திருக்காதீர்கள்
முயற்சியோடு முன்னேறிச்
செல்லுங்கள்
ஒரே நாளில் எல்லாம் மாறி விடுவதில்லை,ஒவ்வொரு நாளின் முயற்சியைப் பொறுத்து உள்ளது உங்களது வளர்ச்சி.
*மண்ணையும் பொன்னாக்க கற்றுக் கொள் என்பார்கள் நம் முன்னோர்கள்...*
*அதே போல் நேரத்தையும் வீணடிக்காமல் பொன்னாக்க கற்றுக் கொள்..!*
வாழத் தெரிந்தவன்
எந்த வசதியும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருப்பான்.
வாழத் தெரியாதவன்,
எல்லா வசதிகளும் இருந்தும் மகிழ்ச்சியற்றவனாகவே இருப்பான்.
வாழ்க்கை என்பது
ஒரு மியூசிக் பிளேயர் அல்ல, அதில் நீங்கள் விரும்பிய பாடல்களைக் கேட்பதற்கு. வாழ்க்கை வானொலி போன்றது அதில் என்ன வந்தாலும் ஏற்று மகிழ்ச்சியடையுங்கள்.
நீங்கள் தொடர்ந்து குறை கூறிக் கொண்டே இருந்தால், உங்களுக்குள் எதிர்மறை வினைகள் அதிகரிக்கும், அடுத்தவரை குறை கூறுவதை விட்டோழியுங்கள்.
இந்த உலகத்தில்
பிறரை மாற்ற நினைப்பது
வெறும் பிரமை.
தன்னைத் தானே
மாற்றிக் கொள்வது தான்
சரியான மாற்றம்.

No comments:

Post a Comment