Monday 25 March 2024

சின்ன ஆசை பெரிய ஆசை .

 சின்ன ஆசை பெரிய ஆசை .

*_கடன் பட்டு பணக்காரனாக_*
*_வாழ்வதைவிட._*
*_கடன் படாத ஏழையாக_*
*_வாழ்வதே மேல்._*
எல்லோருமே
ஆசைப்படுவோம் அதில் தப்பில்லை. ஆனால் பேராசைபடும் போது
அது எவ்வளவு பெரிய ஆபத்தை கொண்டுவரும்ன்னு நமக்கு உணர்த்துகிறது இந்தக் கதை.
ஹீரோ ஒரு பணப் பைத்தியம். அப்படியிருக்கவனுக்கு
ஈஸியா பணம் கிடைக்குற வழி தெரிஞ்சா விடுவானா.
அவனுக்கு ஒரு சாபம்
பற்றித் தெரிய வருது.
ஹஸ்தர் என்னும் கடவுளுடைய சாபம்.
அந்த சாபப்படி ஹஸ்தரால் தானியங்களைத் தொட முடியாது. அதனால் ஹீீரோ ஹஸ்தரை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்குச் சென்று உணவு கொடுப்பான். அந்த உணவைச் சாப்பிடும் போது அதனிடமிருந்து தங்க காசுகளை எடுத்துட்டு வந்துடுவான். இப்படியே அவன் ராஜ போக வாழ்க்கை வாழுவான். ஆனால் அவன் ஒவ்வொரு முறை ஹஸ்தரை பார்க்க போகும் போதும் ஒரே ஒரு வாளியில் மட்டும் தான் உணவு எடுத்துட்டுப் போவான். இதுவரை அவனுக்கு இருந்தது ஆசை.
அவனுக்கு வயசாயிடிச்சி
இனி இந்த ரகசியத்தை
தன் பையனுக்குச் சொல்லித்தரணும்னு நினைப்பான். அவன் பையனிடம் இதைப் பத்தி சொல்ல அவன் ஒரு யோசனை சொல்லுவான்.
எதுக்கு ஒவ்வொரு முறையும் ஒன்னு ஒன்னா வாளியில் உணவு எடுத்துட்டு போகணும். நிறைய வாளியில் நிறைய உணவு எடுத்துட்டு போவோம். நிறைய தங்க காசுகள் கிடைக்கும்னு யோசனை சொல்லுவான். அது ஹீரோக்கு சரின்னு பட அவனும் அதை ஏத்துப்பான்.
நிறைய உணவு சமைச்சி நிறைய வாளிகளில் எடுத்துட்டு போவான். உணவை ஹஸ்தருக்கு கொடுக்க போகும் போது தான் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கும்.
அவன் எத்தனை வாளிகள் எடுத்துட்டு வந்திருப்பானோ அத்தனை ஹஸ்தர் அங்கே இவர்களுக்காக காத்திருக்கும். கதையின் முடிவு உங்களுக்கே புரிந்திருக்கும்.
ஹீரோ இதை கொஞ்சம் கூட எதிர்பாத்திருக்க மாட்டான்.
சில விஷயங்கள்
தாமதமாத் தான் புரியும்.
ஆனால் புரிஞ்சும் பிரயோஜனமில்லாத நிலைமைன்னு சொல்லுவாங்கள்ள அப்படிப்பட்ட நிலை.
*சின்ன ஆசைக்கு சின்னப் பிரச்சனை, சமாளிச்சிடலாம். பெரிய ஆசைக்கு பெரிய பிரச்சனை, சமாளிக்க முடியாது.*
*ஆசைக்கும் பேராசைக்கும் இடையேயான
நூலளவு வித்தியாசம் இதுதான்.*
_*துயரங்களை நம் மனத்தினுள் புகுத்தி வைத்தால், பல மடங்கு மிகுதியாகி மனச் சோர்வும், மேலும் பல துயரங்களும் ஏற்படும். துயரங்களை மறந்து மகிழ்ச்சியாக வாழப் பழக வேண்டும்.*_

No comments:

Post a Comment