Monday 4 March 2024

வேண்டியது வேண்டாதது . .

 வேண்டியது வேண்டாதது . .

_*சில கனவுகளை நிஜமாக எண்ணி மகிழ்வதும், பல நிஜங்களை கனவாக எண்ணி மறப்பதும்தான் வாழ்க்கை. *_
_*பின் விளைவுகளை சமாளிக்கும் திறமை உள்ளவர்களே, பெரிய முடிவுகளை துணிச்சலாக எடுக்கிறார்கள். *_
_*எல்லை எதுவென்று, உன் மனதிற்கு தெரியும் போது, அடுத்தவர்களின் விமர்சனத்தை பற்றிய, கவலை உனக்கெதற்கு. *_
நாளைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவது இன்றைய எண்ணங்களும், செயல்களும் தான்.
நம் வாழ்வில் மனதை காயப்படுத்தும் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது, அத்தனையும் தீர்க்க ஒருவரிடம் புலம்பினால் போதும் அவன் தான் இறைவன்.
சிலரோடு ஒப்பிட்டு பார்த்தால், நாம் வென்றிருப்போம். சிலரோடு ஒப்பிட்டு பார்த்தால், நாம் தோற்றிருப்போம். யாருடனும் ஒப்பிடாத வாழ்வில், நாம் கண்டிப்பாக மகிழ்ந்திருப்போம்.
வேண்டியதற்கு
கவனம் செலுத்தினாலே
வேண்டாதது
அதுவாகவே விலகிவிடும்.
_*நம்மை விட மூத்தோர்களை நாம் மதிக்கக் கற்றுக் கொள்வோமானால் நமக்கான வெற்றிப் பாதையை நாமே வடிவமைத்து கொள்ளலாம்.*_
_*மூத்தோர்கள் எப்போதும் விலை மதிக்க இயலாத தங்கச் சுரங்கத்தை போன்றவர்கள்.*_
_*துணிச்சல் என்பது.....*_
_*எப்படி முடியும்?*_
_*என்பதற்கும்....*_
_*ஏன் முடியாது?*_
_*என்பதற்கும் உள்ள*_
_*தூரமே.*_
_*தவிக்கும் போது*_
_*துடுப்பை*_ _*அனுப்பாதவர்கள்...*_
_*கரை சேர்ந்த பிறகு*_
_*கப்பலை அனுப்பி*_
_*என்ன பயன்.*_
_*நீதி என்பது வேறு....*_
_*நேர்மை என்பது வேறு...*_
_*நீதி நம்மிடமிருந்து*_
_*பிறருக்குக் நியாயம் கிடைப்பது...*_
_*(பொது ஒழுக்கம்)*_
_*நேர்மை என்பது*_
_*நமக்கு நாமே நியாயமாக நடந்து கொள்வது....*_
_*(தனி ஒழுக்கம ).*_

No comments:

Post a Comment