Friday 29 March 2024

எளிய வாழ்க்கை .

 எளிய வாழ்க்கை .

உடல் பலமுடன்
இருக்க விரும்பினால் முதலில்
மனதை வலிமையாக்குங்கள்.
மன தைரியத்தை இழந்துவிட்டால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்.
கஷ்டமான வேலைகளைச்
செய்ய உடலைப் பழக்குங்கள். கஷ்டமான சூழ்நிலைகளை
கையாள மனதைப் பழக்குங்கள்.
உடலும் உள்ளமும் உறுதியாய் இருந்தால்
எதையும் எதிர்கொள்ளலாம்.
முடிவே இல்லற போராட்டம் தான் இந்த வாழ்க்கை. முடியும் வரை போராடுங்கள் வென்று விடலாம்.
இறைவனின்
கருணைமழை எப்போதும் நம் மீது விழுந்து கொண்டே இருக்கிறது.
கள்ளம் கபடம் இல்லாத மனதுடன் செய்யும் வழிபாட்டை தெய்வம் ஏற்க மறுப்பதில்லை.
நாம் மிகவும் சாதாரணமானவர்கள் என்பதை உணர்ந்து விட்டால், மனப்பூர்வமாகக் கடவுளிடம் சரணாகதி அடைவது சுலபமாகி விடும்.
வாழ்வில் மாற்றம் உண்டாக வேண்டுமானால், காலஅவகாசம் தேவைப்படும்.
அதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருப்பது அவசியம்.
*உமது திருவுள்ளப்படியே நடக்கட்டும்'* என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
இதனால், சொந்த விருப்பு வெறுப்புகள் கூட காணாமல் போய்விடும்.
தன்னம்பிக்கை இல்லாதவருக்கு வாழ்க்கை அச்சமூட்டுவதாக இருக்கிறது.
வாழ்வில் நல்லதும் கெட்டதும் மாறி மாறியே வரும்.
எது வந்தாலும் சலனமின்றி், தளர்ச்சியின்றி, பொறுமையோடு எதிர்கொள்ளுவதே அச்சமின்மை.
எண்ணம், செயல், இரண்டாலும் கடவுளுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே அது சாத்தியப்படும்.
அந்த பிணைப்பால்
உள்ளம் தெளிவுறும், மகிழ்ச்சி பெறும்.
_*நிம்மதி என்பது நம்மைத் தேடி வராது அது இருக்குமிடத்தைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்...*_
_*தேடுங்கள் நிம்மதி இருக்குமிடத்தை அது உங்கள் அருகிலேயே கூட இருக்கக்கூடும் இல்லை சற்று தொலைவில் இருக்கக்கூடும் அவ்வளவு தான்...!*_
_*உறுதியான தன்னம்பிக்கையானது, மலை போன்ற பிரச்சினைகளை நகர்த்தி, தெளிவான பாதையை உருவாக்கித் தரக் கூடியது. எனவே,* *மனதில் பலகீனமான எண்ணங்கள் வராமல் கவனமாக இருங்கள்.*_
_*எளிய வாழ்க்கையும்* _*உயர்ந்த சிந்தனையும்*_ _*இருந்துவிட்டால் எப்போதும்* *மகிழ்ச்சிக்கு* *குறைவிருக்காது*_

No comments:

Post a Comment