Monday 4 March 2024

அருமை நண்பர் மூத்த பத்திரிகையாளர் மணா அவர்களின் முகநூல் பதிவு.

 அருமை நண்பர்

மூத்த பத்திரிகையாளர்
மணா
அவர்களின் முகநூல் பதிவு.
இது போன்ற ஏராளமான பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன, மணவிழாவில் பங்கேற்ற பல பெருமக்கள் பாராட்டி எழுதிய கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.
வாழிய நட்புணர்வு - மனிதத்தேனீ
04-03-2024
இது ஒன்பதாம் பதிவு.
ஆறாயிரம் பெருமக்கள் 11-02-2024 அன்று பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ மகன் சொ. ராம்குமார் - ஆத்தங்குடி முத்துப்பட்டணம் கீழ வீடு வ. சி. சிவப்பிரகாசம் மகள்
நாச்சம்மை தேவி பூஜா திருமண விழா.
மனதை நிறைத்த அருமையான நிகழ்வு!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கோ, விழாக்களுக்கோ போகிறோம். ஆனால், சில நிகழ்வுகள் மட்டும் மனதில் அபூர்வத் தருணங்களாக நின்றுவிடுகின்றன.
அப்படிப்பட்ட ஒரு அருமையான நிகழ்வை காரைக்குடிக்கு அண்மையில் சென்றிருந்தபோது உணர முடிந்தது.
நீண்ட கால நண்பரும், கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவருமான ஆர்.சொக்கலிங்கம் அவர்களின் இல்லத் திருமணம் காரைக்குடியில் நடைபெற்றது.
மணமக்களான ராம்குமார் - நாச்சம்மை தேவி பூஜா தம்பதியினருக்கான திருமண நிகழ்வுகளுக்காக
அங்கு சென்றிருந்தேன். மணமக்களுக்கு அன்பு கனிந்த வாழ்த்துகள்!
செட்டிநாட்டுப் பண்பும், தமிழர் மரபும் ஒருங்கிணைந்த ஒரு திருமண விழாவாக அது அமைந்திருந்தது.
கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய பல அரசியல்வாதிகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆதீன கர்த்தர்கள் என்று பல்வேறு தரப்பிலான ஒரு முகங்களை ஒரே விழாவில் சந்திக்க முடிந்தது.
மணமகனின் தகப்பனாரான ஆர்.சொக்கலிங்கம், வந்திருந்த அனைவரையும் மேடையிலிருந்து கீழிறங்கிவந்து பொன்னாடை போர்த்தி - அவரவருக்கு உரிய மதிப்பளித்து இருக்கை அளித்து, சிறப்பு ச்
செய்து கொண்டிருந்தார்.
அவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் ஒரு துளி அளவும் களைப்பில்லாமல் நிறைந்த மனதோடு
பரபரவென்று வழக்கம் போல,
அவர் ஓடி க் கொண்டிருந்தார்.
மாலையில் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரில் திருமண வரவேற்பு.
கரு.பழனியப்பன் திரைப்படங்களில் வருவதைப் போலவும், இயக்குனர் மகேந்திரனின் ‘சாசனம்’ படத்தில் வருவதைப் போலவும் பழங்காலக் கட்டுமான மரபில் அமைந்த செட்டிநாட்டுக் கூடத்தில் நடந்த வரவேற்பு விழா மிகவும் வித்தியாசமாகவும், நெருக்கமாகவும் உணர வைத்தது.
அண்மையில் எந்த விழாவும் இந்த அளவுக்கு மனதை நிறைக்கவில்லை என்கிற அளவுக்கு அமைந்திருந்தது அந்தத் திருமண விழா.
இதற்கு மூல காரணமாக இருந்தவர் நீண்டகால நண்பரான மதுரையைச் சேர்ந்த ஆர்.சொக்கலிங்கம்.
அவரை ‘மனிதத் தேனீ’ என்று நண்பர்கள் செல்லமாக அழைப்பார்கள்.
பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் என்று மதுரையைச் சார்ந்த பல்வேறு பிரமுகர்களுக்கு தொடர்ந்து விழாக்கள் எடுத்து, அவர்களை கவனப்படுத்திப் பிரபலப்படுத்தியவர் ஆர்.சொக்கலிங்கம்.
எனக்கும் அதேவிதமான அபூர்வமான கணங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் சொக்கலிங்கம். மதுரையில் என்னுடைய பல புத்தக வெளியீட்டு விழாக்களை அறிமுகப்படுத்தி விழா எடுத்தவரும் அவரே.
மதுரையில்" அகிலா நியூஸ் "என்கின்ற செய்தி நிறுவனத்தை நடத்தி அதை நிறைவு செய்து, சென்னையில் குமுதத்தில் பணியாற்றுவதற்காக நான் கிளம்பியபோது அதற்காக ஒரு விடைபெறும் விழாவை, மதுரையில் உள்ள பிரேம் நிவாஸ் ஹோட்டலில் நடத்தி இருந்தார்.
அதில் மதுரையில் உள்ள பல்வேறு பிரமுகர்கள் கலந்துகொண்டு மனம் நெகிழ்கிற பேசி வழியனுப்பி வைத்தது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணமாகவே இன்னும் இருக்கிறது.
30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு நீண்ட கால நட்பு கொண்ட நண்பர் சொக்கலிங்கம் போன்றவர்கள் இன்னும் அதே சுறுசுறுப்புடனும்,
அதே கவன ஈர்ப்புடனும் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனதிற்கு நெகிழ்வாகவும் இருக்கிறது. நிறைவாகவும் இருக்கிறது.
இந்த மன நிறைவைத் தந்த நண்பருக்கு அன்பும் நன்றியும் என்றும்.























No comments:

Post a Comment