Saturday 16 March 2024

நிம்மதி நிலைக்கட்டும் . .

 நிம்மதி நிலைக்கட்டும் . .

*நம்முடைய வார்த்தைகள்
பிறரை வாழ்த்துவதாக
அமைய வேண்டும்.
பேச்சுக்கள் மற்றவர்களின்
துயரைப் போக்க வேண்டும்.*
*பதறிய உள்ளங்களை
சாந்தப்படுத்த வேண்டும்.
வார்த்தைகள் சொல்லப்படும் போது உணர்ச்சியுடன்
சொல்லப்பட வேண்டும்.
அன்பான வார்த்தைகள் மட்டுமே தன்னம்பிக்கை தரும்.*
*கனிவான வார்த்தைகள்
உயிரைக் காக்கும்.
கருணையான வார்த்தைகள்
காலம் அறிந்து
சொன்ன வார்த்தைகள்
துன்பத்தைத் தவிர்க்கும்.*
*தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும்.
நகைச்சுவை வார்த்தைகள்
மன இறுக்கத்தைத் தளர்த்தும்.*
*பண்பான வார்த்தைகள்
இதயத்தைத் தொடும்.
பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டும். பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டும்.
மனஅழுத்தத்தைக் குறைக்கும். வாழ்த்துகின்ற வார்த்தைகள் வசந்தத்தைக் கொடுக்கும்.*
*ஒரு யுத்தத்தை
வார்த்தைகளால் தொடங்க முடியும். முடித்து வைக்கவும் முடியும்.
சில வார்த்தைகள் கசக்கும்.
சில வார்த்தைகள் இனிக்கும்.*
*சில வார்த்தைகள்
இருட்டைப் போக்கும்.
சில வார்த்தைகள் மயில் இறகு போல் இதமாக இருக்கும்.*
*வார்த்தைகளை உபயோகிக்கும் போது யோசித்துப் பேசுவது நல்லது.*
*அன்பான வார்த்தைகள் உறவின் இடைவெளியைக் குறைக்கின்றன. உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை. *
*தோல்விகள் சூழ்ந்தாலும்
இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.
இந்த விடியல்
உங்கள் வாழ்விலும் விடியட்டும். *
கட்டுக்கட்டாக
பணம் இருந்தும்,
தேக்கு மர கட்டில் இருந்தும்,
உறக்கம் வராமல் சிலரும்,
சட்டியிலே சோறும் இல்லாமல்
தரை விரிக்க துணியும் இல்லாமலும் நிம்மதியான உறக்கத்தில் சிலரும்
என எல்லோருக்கும் எல்லாமும் தருவதில்லை வாழ்க்கை.
காரில் போகிறவரைப் பார்த்து கவலைப்பட்டு நிற்காதீர்கள்,
கால் இல்லாதவர்
உங்களைக் கடந்து போவதைக் கண் திறந்து பாருங்கள்
அப்போது புரியும் வாழ்க்கை.
ஏதோ ஒன்றை
அடைவதில் மட்டும் தான் நிம்மதி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். சிலவற்றை இழந்தால் கூட
நிம்மதி கிடைக்கும்.

No comments:

Post a Comment