Monday 18 March 2024

நிஜமும் நிதானமும் . .

 நிஜமும் நிதானமும் . .

_*குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும், அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும். சிலரின் வாழ்க்கையும் இதைப் போலவே.*_
_*அதிர்ஷ்டத்திற்காகக்
காத்திருப்பதும்,
சாவுக்காக காத்திருப்பதும் ஒன்றே.*_
_*நல்லதுக்கு மட்டுமே
தலையாட்டுபவர் நண்பர், சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுபவர் கள்வர்.*_
*_சரியோ, தவறோ தைரியமாக, வெளிப்படையாக பேசுபவர்கள்_*
*_யாருக்கும் துரோகியாக மாறமாட்டார்கள்.._*
*திறமையான முதலாளியாக இரு.*
*இல்லையேல்*
*திறமை இருக்கும் இடத்தில் உழைப்பாளியாகக் கூட இரு.*
_*நாம் நம் எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டு இருக்கிறோம்.*_
_*தெளிவான எண்ணங்களே
உயர்வான எண்ணங்களை உருவாக்கும்.*_
_*எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம். நமது எண்ணம் தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது.*_
_*திசை திரும்பாத அம்பு தான்
ஆற்றல் கொண்டது,
அதுவே இலக்கை அடையும்.*_
_*உங்கள் எண்ணங்கள் தடுமாறாமல் இருந்தால்தான் உங்கள் பயணங்கள் தடம் மாறாமல் இருக்கும், நீங்கள் சேரும் இடமும் சிறப்பாக இருக்கும்.*_
வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி
வளர்தாலும் அதன் கசப்புத் தன்மை மாறாது. அது போல் கெட்ட
மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
~ சாணக்கியர்.
தடுக்கி விழும் பொழுது தான் தெரிகிறது, தள்ளி விடுபவர் யார்
தூக்கி விடுபவர் யார் என்று.
நிஜமில்லாதவரையும், நிதானமில்லாதவரையும் அதிகம் நேசித்தால் அவஸ்தைகள் தான் வாழ்வில் மிஞ்சும்.
மனசாட்சியை
மதிக்கத் தெரியாதவர்கள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள். இவர்களிடமிருந்து ஒதுங்கி இருங்கள்.
ஏளனமாக பேசியவர்களை,
ஏணியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை எட்டமுடியாத உயரத்திற்குச் சென்றுவிடும்.

No comments:

Post a Comment