Monday 4 March 2024

உண்மை வழிநடத்தும்

 உண்மை வழிநடத்தும் . .

முந்தைய நாளின்
மனக் கசப்புகளைச் சுமப்பதன்
மூலம் ஒரு சிறந்த நாளைப் பெறுவதற்கான வாய்ப்பை
இழந்து விடாதீர்கள்.
கடந்த காலத்தை மறந்துவிடுங்கள். நிகழ் காலத்தில் வாழுங்கள்.
இழந்தது இழந்ததாகவே இருக்கட்டும். திருப்பி எடுக்க முயற்சிக்காதீர்கள்.
அது உங்களை இன்னும் அதிகமாக காயப்படுத்தும்.
வாழ்க்கையில் ஒன்றை விட இன்னொன்று சிறந்தது என்று எண்ணுவதை விட,
ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் என்று புரிந்து கொண்டு இயல்பாக ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும்.
நல்ல நோக்கத்துடன் நீங்கள் பயணிக்கும் பொழுது
உங்களுக்கான பாதையில் இந்த பிரபஞ்சமே உங்களை வழிநடத்தும்.
_*ஏன்... எப்படி... எவ்வாறு… எதனால்.. - என்ற சொற்களைப் பயன்படுத்தி உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்*_
_*ஒரு நல்ல ஐடியாவை உடனே*_ _*செயல்படுத்துங்கள்*_
_*ஆனாலும் அதையும் யோசித்து*_ _*செயல்படுத்துங்கள்*_
_*நம்முடைய பழைய*_ _*சாதனைகளை மறந்து விட்டு அடுத்தது என்ன*_
_*என்கிற ஆர்வத்துடன் அணுகினால் மேலே மேலே சென்று கொண்டே இருக்கலாம்*_
இன்னொருவரின் நலனுக்காக வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு
இறைவன்
முன்னுரிமை அளிக்கிறார்.
பிறர் துன்பங்களை
நீங்கள் தாங்கும் போது, உங்கள் பாதங்களை இறைவன் சுமப்பார்.
மற்றவர்களுக்காக இறைவனிடம் முறையிடும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
நீங்கள் சொந்தமாக முறையிடத் தேவையில்லை. ஏனென்றால் உங்களுக்கு தேவையானதை கடவுள் அறிந்திருக்கிறார்.
அவர் பாதம் சரணடையுங்கள்.
உங்கள் பயம் நீங்கி,
கவலைகள் காணாமல் போகும்.
_*ஒருவருடைய நடத்தைதான் நண்பர்களையோ, விரோதிகளையோ உருவாக்குகிறது.*_
_*பொய்யை சொல்லாதீர்கள். நீங்கள் தான் அதைக் காப்பாற்ற வேண்டும். உண்மையைச் சொல்லுங்கள் அது உங்களைக் காப்பாற்றும்.*_
_*நல்லதையும், கெட்டதையும் கையாளும் குணத்தை நீங்கள் பெற்றுவிட்டால், எதைப்பற்றியும் கவலைப்படாத மனிதனாக உங்களால் வாழ முடியும்.*_
_*சிரித்து வாழப் பழகினால்
துயரங்கள் உங்களை நெருங்காது. சிந்தித்து வாழ்ந்தால் பொய்கள் சொல்லத் தெரியாது.*_
_*அனைத்தையும்
ஏற்கப் பழகினால் வாழ்க்கை
முழுவதும் சிறப்பாக இருக்கும்*_

No comments:

Post a Comment