Saturday 2 March 2024

அறிவுரையும் விளக்குமாறும்

 அறிவுரையும் விளக்குமாறும் . .

*_நோயின்றி வாழ வேண்டும்_*
*_என்று நினையுங்கள்._*
*_அடுத்தவரை நோகடித்து_*
*_வாழ வேண்டும் என்று_*
*_நினைக்காதீர்கள்._*
எத்தனை அமைதியாக இருக்கிறீர்களோ அத்தனை
சிறந்தது, ஏனென்றால் மக்கள் சொற்களைத் தவறாகப் புரிந்து கொள்வதில் வல்லுநர்கள்.
ஆர்வமாய் கேட்கப்பட்ட
வார்த்தைகள் அலட்சியமாய்
தவிர்க்க முற்பட்டால், புரிந்து கொள்ளுங்கள்
அது நமக்கான இடமல்ல.
தொடந்து பேசினால்
வார்த்தைகள் எல்லை மீறக் கூடும்
எனத் தெரியும் போது
உரையாடலில்
விடை கொடுப்பதும் ஒழுக்கம் தான்.
நிதானம் தவறினால்
நிம்மதியில்லை.
வாக்கு தவறினால்
மரியாதையில்லை.
சிந்தனை இல்லையெனில்
சிறப்புகள் இல்லை.
_*அவநம்பிக்கையோ அல்லது பயமோ இருக்கும் போது சத்தியநிலை அறியப்படுவது இல்லை.*_
_*நாம் ஒவ்வொருவரும் நம் முன்னோர்களின் கருணையாலும், தியாகத்தாலும் இங்கு இப்படி இருக்கிறோம் என அறிந்து கொண்டால், நாம் நம்மை விடச் சிறந்த வாரிசுகளை உருவாக்குவோம்.*_
_*அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்லும் போது இருக்கும் தைரியம், தனக்குத் தேவைப்படும் போது அடுத்தவனிடம் போய் விடுகிறது.*_
_*மன பலம் இழந்து விட்டால் உடல் பலம் ஒன்றுக்கும் உதவாது. அதனால் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும்.*_
_*மனது குழப்பமடைந்தால் தனிமை பழகுங்கள். மனதை காயப்படுத்தினால் மௌனம் பழகுங்கள்.*_
_*மருந்து போட்டால் உடல் வலி தெரியாது. மறக்க தெரிந்தால் மன வலி வராது.*_
_*அறிவுரையும்
விளக்குமாறும் ஒன்னு தான்.*_
_*முதல்ல தான் சுத்தமா இருந்தால் தான் நன்றாக சுத்தம் செய்ய முடியும்.*_
_*ஒரு மனிதனுக்கு கொள்கை, கோட்பாடு எவ்வளவு முக்கியமோ...*_
_*அதற்கிணையானது தன்மானமும், சுயமரியாதையும்.*_

No comments:

Post a Comment