Tuesday 26 March 2024

பெருமை பொறுமை . .

 பெருமை பொறுமை . .

_*குடிசையில் இருப்பவரெல்லாம் ஏழையும் அல்ல, மாளிகையில் இருப்பவரெல்லாம் பணக்காரரும் அல்ல. மனத்திருப்தியோடு இருப்பவர்களே உண்மையான பணக்காரர்கள்...!*_
_*உங்களிடம் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றியுடன் இருங்கள். ஏனென்றால், பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.*_
_*எது உங்களை பலவீனப் படுத்துகிறதோ அதை தயக்கமின்றி தூக்கி எறிந்து விடுங்கள்.*_
_*வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதீர்கள். பின் வாங்காமல் செல்கிறீர்கள் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.*_
பொறுமையாக இருப்பவனால் தான் விரும்பியதைப் பெறமுடியும்.
மௌனம் உங்களை
சந்தோசப்படுத்தும். புன்னகை பிறரை உற்சாகப்படுத்தும்.
உன் மெளனம் மற்றவர்க்கு சந்தோசம் தரும் என்றால் நீ அமைதியாகவே இருந்து விடு.
ஆனால் ஒருபோதும் ஊமையாக இருந்துவிடாதே.
ஒவ்வொருவருக்கும்
பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை
பேசும் வார்த்தையிலும் தேவை.
நினைவில் வைத்திருங்கள்
பெருமை அழிவைத் தரும். பொறுமையே வெற்றியைத் தரும்.
யாரிடமும் ஏமாறாமல் வாழும் வாழ்க்கையை விட,
யாரையும் ஏமாற்றாமல் வாழும் வாழ்க்கையே சிறந்தது.
ஆயிரம் தவம்,தானம், தர்மங்களைக் காட்டிலும் உத்தமமானது "மனசாட்சியுள்ள மனிதனாய்"
வாழ்வது தான்.
ஒரு மனிதனின்
உண்மையான செல்வம் இந்த உலகில் அவன் செய்யும் நன்மைகள் தான்.
நீங்கள் அடுத்தவருக்காக விளக்கை ஏற்றும்பொழுது, உங்களுடைய பாதையும் வெளிச்சமாகிறது.
_*உங்களை மற்றவர்கள் போற்றும் போது மகிழ்ச்சி அடையாதீர்கள்.*_
_*அது போல் உங்களை மற்றவர்கள் தூற்றும் போது மனம் வருந்தாதீர்கள்.*_
_*காரணம் உங்களுக்கு கிடைக்கும் புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ*_
_*இரண்டுமே உங்கள் சொல்,செயல் மற்றும் கால மாற்றத்தால் ஏற்படுவதே.*_
_*எளிமையும் மரியாதையும் உயர்ந்த பண்புகள்.*_
_*இது பலருக்கு தெரிவது இல்லை.*_
_*இதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.*_

No comments:

Post a Comment