Saturday 23 March 2024

கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் கலைத் திருவிழா.

 கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் கலைத் திருவிழா.

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொள்ளுத்தண்ணிபட்டி யூஜிஆர் நகரில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று மாலை நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் கலைத் திருவிழா
அதன் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் இளமாறன் வழிகாட்டலில்
இயக்குநர்கள் ராமசாமி, சரவணன், சங்கர், முருகேஷ் முன்னிலை வகித்தனர்.
மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
குத்துவிளக்கு ஏற்றி வைத்து
வானம் வசப்படும்
என்ற தலைப்பில் 51 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றி
சிறந்த மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
மனிதத்தேனீ தனது சிறப்புரையில் வாழ்வின் சிறந்த தருணம் கல்லூரி காலம், ஈடுபாட்டுடன் கூடிய கல்வி, நட்புணர்வு, கலைத் திறன், விளையாட்டு, பல்வேறு விதமான மனிதர்களின் நிலையை அறிதல் என புதிய உணர்வினைப் பெற முடியும்.
கற்றுக் கொள்ளும் கலை
மற்றும் கற்றுத் தரும் கலை இவை இரண்டும் உண்டு.
அவமானங்களையும் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் எதிர் கொள்ளும் பக்குவத்தைப் பெற்றிடுங்கள்.
உலகின் மூத்த மொழியான நமது அன்னைத் தமிழ் , தாய் மொழிகளின் தாய் மொழி. அதனை முதலில் நாம் கற்றிட வேண்டும்.
பின்னர் விருப்பம் உள்ள
எந்த மொழியும் கற்றிடலாம்.
கல்வியுடன் பொது அறிவும்
தேச பக்தியும்,
பெற்றோர் வழி காட்டலும் மிக முக்கியம், எதையும் நேர்த்தியோடும், உண்மையோடும் செய்யுங்கள், வானம் வசப்படும் என்றார்.
கல்லூரி முதல்வர் டி. திருப்பதி ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர் கலைச்செல்வி வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இங்கு படித்த 90 பேருக்கு அண்மையில் பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
முற்றிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வி வேலைவாய்ப்பு மேம்பட இந்த யூஜிஆர் எஜுகேஷனல் பவுன்டேஷன் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.











































No comments:

Post a Comment