Wednesday 20 March 2024

யாருடன் பயணிக்க வேண்டும் . . .

 யாருடன் பயணிக்க வேண்டும் . . .

*வகுப்பறை கற்றுத்தந்த*
*பாடத்தை விட*
*வாழ்க்கை கற்றுத்தந்த*
*பாடமே அதிகம்.*
*மனிதனின்*
*உண்மையான அழகு*
*இன்னொரு மனிதனை*
*மதிக்கின்ற போது வெளிப்படும்.*
_*நிம்மதி என்பது
நம்மைத் தேடி வராது அது இருக்குமிடத்தைத் தேடி
நாம் தான் செல்ல வேண்டும்.*_
_*தேடுங்கள்
நிம்மதி இருக்குமிடத்தை
அது உங்கள் அருகிலேயே கூட இருக்கக்கூடும் இல்லை சற்று தொலைவில் இருக்கக்கூடும்
அவ்வளவு தான்.*_
_*உடல் பலமுடன்
இருக்க விரும்பினால் முதலில் மனதை வலிமையாக்குங்கள்.*_
_*மனதைரியத்தை
இழந்துவிட்டால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்.*_
_*கஷ்டமான வேலைகளை
செய்ய உடலை பழக்குங்கள்.
கஷ்டமான சூழ்நிலைகளை கையாள மனதை பழக்குங்கள்.*_
_*உடலும் உள்ளமும்
உறுதியாய் இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம்.*_
_*முடிவே இல்லற போராட்டம் தான் இந்த வாழ்க்கை. முடியும் வரை போராடுங்கள் வென்று விடலாம்.*_
ஒரு செயலை
எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கு தோல்விகளே மிகச்சிறந்த பாடம்.
சில தோல்விகளும்
வாழ்வில்
தேவையாக அமைந்துவிடுகிறது.
உங்கள் நெடுந்தூரப் பயணத்தில் உங்களுடன் யார் பயணிக்க வேண்டும், யாருடன் நீங்கள் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க
சில தோல்விகளும் தேவை தான்.
வென்ற பிறகு கிடைக்கும்
பாராட்டை விட,
வீழ்ந்த பிறகு கிடைக்கும்
ஊக்கமே
பலருக்கும் தேவைப்படுகிறது.
ஊக்கம் தருபவர்கள்
உடன் இருந்தால்
தோற்கும் நிலை தூரப் போகும்.

No comments:

Post a Comment