Tuesday 12 March 2024

தூக்கி எறிந்துவிடுங்கள் . .

 தூக்கி எறிந்துவிடுங்கள் . .

*உயர்ந்த நிலைக்குச் சென்றவர்களின் வெற்றியின் இரகசியமே,*
*அவர்கள் ஒருபோதும் தம் பழைய நிலையை மறக்காதது தான்.*
ஏமாந்து போவதை விட
பெரிய வலி,
நாம் ஏமாந்துட்டு இருக்கோம் என்று தெரியாமல் இருப்பது தான்.
சந்தர்ப்பத்தை அளித்துவிட்டு அவர்களை சந்தர்ப்பவாதி என்று சொல்லாதீர்கள். அவைகள் உங்களை நீங்களே உணர்ந்து கொள்ள கிடைத்த நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருவருக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் பெரும்பாலும் உங்களிடம் அவருக்கான தேவைகள் முடிந்து விட்டதாகவும் இருக்கலாம், அவர்களைப் பின் தொடராதீர்கள்.
யாரையும் முக்கியமாக நினைக்காதிருப்பதும், யாருக்கும் முக்கியமில்லாதவர்களாக இருப்பதுமே நிம்மதிக்கு வழிவகுக்கும்.
_*குடிசையில் இருப்பவரெல்லாம் ஏழையும் அல்ல,*_ _*மாளிகையில்*_
_*இருப்பவரெல்லாம் பணக்காரரும் அல்ல. மனத் திருப்தியோடு இருப்பர்களே உண்மையான பணக்காரர்கள்.*_
_*உங்களிடம் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றியுடன் இருங்கள்.*_
_*ஏனென்றால், பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.*_
_*எது உங்களை பலவீனப் படுத்துகிறதோ அதை தயக்கமின்றி தூக்கி எறிந்து விடுங்கள்.*_
_*வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதீர்கள். பின் வாங்காமல் செல்கிறீர்கள் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.*_

No comments:

Post a Comment