Monday 18 March 2024

வேண்டியது வேண்டாதது .

 வேண்டியது வேண்டாதது . .

_*அறிவுரை என்பது
அனுபவத்தில் கற்றுக் கொள்வது. ஒன்றும் செய்யாமல்
வயது மட்டும் கூடினால் அனுபவம் கிடைக்காது.*_
*காரணங்கள் இல்லாமல்*
*தொடரும் வாதத்தில்....*
*சொல்லப்படும் காரணங்கள்*
*அனைத்தும் கட்டுக்கதையே..*
யாராவது உங்களுக்கு
எரிச்சல் அடையச் செய்கிறார்களா
அவர் தான் உங்களுக்குப் பொறுமையைப் போதிக்கிறார்.
யாராவது
உங்களை விட்டு விலகிச் செல்கிறாரா அவர்கள் தான் உங்களுக்கு
தனியாக இருப்பது எப்படி என்று
கற்றுக் கொடுக்கிறார்.
யாராவது
உங்களிடம் அதிகமாக கோபப்படுகிறார்களா
அவர்கள் தான் உங்களுக்கு மன்னிப்பு என்பது என்ன என்பதையும்,
இரக்கம் என்பது என்ன என்பதையும் போதிக்கிறார்.
உங்கள் மீது அதிகாரம் செலுத்தும் எதுவும் உங்களுக்கு
அதை நீங்கள் எப்படிப் பெறுவது என்று போதிக்கிறது.
நீங்கள் வெறுக்கும் எதுவுமே உங்களுக்கு நிபந்தனையற்ற அன்பைப் போதிக்கிறது.
நீங்கள் எதைக் கண்டு பயந்தாலும்
அது உங்களுக்கு தைரியத்தை கொடுத்து பயத்தை போக்கும் வித்தையைக் கற்பிக்கிறது.
உங்களால்
கட்டுப்படுத்த முடியாத எதுவுமே உங்களுக்கு எப்படி அதை அப்படியே எடுத்துக்கொள்வது என்பதைப் போதிக்கிறது.
*இப்படி எதிர்பதத்தில் நமக்கு நடக்கும் எல்லா விஷயங்களிலும் ஒர் நல்ல விஷயத்தை வாழ்க்கை நமக்கு போதிக்கிறது.*
*இதுதான் வாழ்க்கை
நமக்கு சொல்லித்தரும்
"அழகான உண்மைகள்"*
நாளைய வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றுவது இன்றைய
எண்ணங்களும்,
செயல்களும் தான்.
நம் வாழ்வில் மனதைக் காயப்படுத்தும் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அத்தனையும் தீர்க்க ஒருவரிடம் புலம்பினால் போதும்
அவன் தான் இறைவன்.
சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்தால்,
நாம் வென்றிருப்போம்.
சிலரோடு ஒப்பிட்டு பார்த்தால்,
நாம் தோற்றிருப்போம்.
யாருடனும் ஒப்பிடாத வாழ்வில்,
நாம் கண்டிப்பாக மகிழ்ந்திருப்போம்.
வேண்டியதற்குக் கவனம் செலுத்தினாலே
வேண்டாதது
அதுவாகவே விலகிவிடும்.
_*பிறர் குற்றத்தை மட்டும்
தேடிக் கண்டு பிடிப்பதில் கவனம் செலுத்துவது கூடாது. நல்ல அம்சங்களையும் காண முயலுங்கள்.*_

No comments:

Post a Comment