Friday 8 March 2024

புகழ் இகழ் . .

 புகழ் இகழ் . .

ஆன்மிகப்பாதையில்
முன்னேற்றிச் செல்லும் ஒவ்வொரு அடியையும்
போராடித்தான் பெற முடியும்.
ஒரு செயலைச்
செய்து முடிப்பது கஷ்டம்
என்பதற்காக
முயற்சியைக் கைவிடுவது கூடாது.
சகிப்புத்திறன்
இல்லாவிட்டால் உலகில் எதையும் சாதிக்க முடியாது.
ஒவ்வொரு நாளும்
அன்று நடந்தவற்றை மனதில் அசை போடுங்கள்.
தவறு ஏற்பட்டு இருக்குமேயானால், அதை மீண்டும் செய்யாமல் இருக்க மனதில் உறுதி எடுங்கள்.
புகழ்,
இகழ்
இரண்டிலும் கவனம் செலுத்தாமல், கடமையில் மட்டும்
கருத்தைச் செலுத்த வேண்டும்.
நம் விருப்பத்திற்கு
மாறாக நடந்தாலும் மனம் உடைந்து விடக்கூடாது.
சஞ்சலம் சிறிதுமின்றி
எப்போதும் அமைதியாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
சகிப்புத் தன்மையே
நமது வாழ்வின் குறிக்கோளாகட்டும்.
மனஅமைதியை
ஒருபோதும் இழக்க
அனுமதிக்கக் கூடாது.
திட சித்தத்தோடு இருக்க வேண்டும்.
நம்பிக்கையுடனும், மனத்தூய்மையுடனும்,
செயலாற்ற வேண்டும்.
நேர்மையற்ற வழியில்
பெறும் இன்பம்
நீர்க்குமிழி போல் மறைந்து விடும்.
வம்பளக்கும் பழக்கம்
நம்மைக் கடவுளிடம் இருந்து
வெகு தொலைவில் நிறுத்தி விடும்.
பிறருடன் சண்டை சச்சரவில், மனதளவில் ஈடுபட்டாலும், அது கடவுளின் பணிக்கு எதிரானதாகும்.
மனதில் நேர்மை இருக்குமானால், நம்மைச் சுற்றியுள்ள
எல்லாமே நமக்கு உதவி செய்யத் தயாராய் இருக்கும்.
எனவே, நல்லதை மட்டுமே
சிந்தியுங்கள்.
பிறருக்கு பயன் தரும்
நல்லதை மட்டுமே பேசுங்கள்.
நற்செயல்களில் மட்டுமே
ஈடுபட்டு வாழுங்கள்.

No comments:

Post a Comment