Wednesday 13 March 2024

அன்பும் அறிவும் . .

 அன்பும் அறிவும் . .

_*இன்பத்திற்கு மட்டும் அன்பை தேடாதீர்கள்.*_
_*துன்பத்திலும் ஆறுதல் சொல்லும் அன்பை தேடுங்கள்.*_
_*அதுவே கடைசி வரை நீடிக்கும்.*_
_*வாழ்க்கையில், கற்றது கை மண்ணளவு....*_
_*கல்லாதது உலகளவு....*_
_*என்பது முன்னோர் வாக்கு..*_
_*வாழ்க்கையில் எப்பொழுதும் கற்று கொண்டே இருக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இருப்போம். *_
_*தெரியாததை தெரிந்து கொள்வோம்.*_
_*நேர்மையுடன் செயல்படுவோம்...*_
* மனதினால் உயர்ந்து,
வாழ்க்கைத் தரத்தையும்
உயர்த்திக் கொண்டு விடலாம்.
அப்படி உயர்ந்தால் வாழ்க்கை நடத்துவதில் சிரமம் இருக்காது.
* அனைவரும் அவரவர்
தர்மத்தைக் காப்பாற்றி கொள்ளப் பயன்படுபவை தாம் மந்திரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டு விடக்கூடாது.
* நம் துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில்
அமுக்கிவிட வேண்டும்.
அப்போது தண்ணீருக்குள்
மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடும்.
* "அன்பே சிவம்' என்கிறார் திருமூலர், "அறிவான தெய்வமே' என்கிறார் தாயுமானவர்.
இந்த அன்பையும் அறிவையும் அன்னபூரணி நமக்கெல்லாம் பிச்சையாகப் போட பிரார்த்திப்போம்.
* அவரவருக்கான பணியை பக்தியோடு பின்பற்றி செய்தால், மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் உண்மையான பக்தியும் ஞானமும் கிடைக்கும்.
* கோபம், கெட்ட எண்ணம்
இவைகள் இல்லாமல் சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் ஏற்படுகிறது.
_*வேண்டியது வேண்டாதது என எதுவும் இல்லை இவ்வுலகில்..*_
_*காலமறிந்து நாம் தேடுவது வேண்டியவையானது..*_
_*காலம் கடந்து பின் நாம் தேடுவது வேண்டாதவை!*_
All reactions:
Veeraperumal Adv Karuppasamy, Chandra Sekar and 3 others

No comments:

Post a Comment