Friday 15 March 2024

மாற்றம் மகத்தானது

 மாற்றம் மகத்தானது . .

வேலை நிமித்தமாக வெளியூர் நபர் ஒருவர் ஆட்டோக்காரர் ஒருவரை அழைத்து இந்த இடத்திற்கு ஆட்டோ வருமா என்று கேட்கிறார்.
ஆட்டோக்காரரும் ஓகே சார் போலாம் என்று சொல்லி வண்டியை எடுக்கிறார்.
திடீர் என அந்தப் பயணம் செய்பவர்
போகும் வழியில் ஹோட்டல் ஒன்றை நிறுத்துமாறு சொல்கிறார்.
நல்ல பிரபலமான ஹோட்டலில் ஆட்டோக்கார நிறுத்துகிறார்.
உடனே அந்த நபர் இங்கு நிறுத்த வேண்டாம்,
சாலையோர உணவக கடையில் நிறுத்துமாறு சொல்கிறார்.
சரி சார் என்ற ஆட்டோக்காரரும் ஒரு வழியாக ஒரு உணவு கடையை கண்டுபிடித்து சாப்பிட்டார்கள்.
அந்தக் கடை அவ்வளவு பிரமாதமாக இல்லை, ஒரு ஏழை விதவை அம்மா நடத்தும் உணவு கடை , உணவும் ஓரளவு சுமாராகத்தான் இருந்தது.
அம்மா எவ்வளவு காசு
என்கிறார் அந்த பயணி.
அந்த அம்மா ஐயா 65 ரூபாய் ஐயா
அம்மா இந்தா காசு
உடனே அந்த அம்மா 100 ரூபாய்க்கு சில்லறை இல்லைங்க ஐயா
பரவாயில்லை நாளை வரும்போது நான் கழித்துக் கொள்கிறேன் என அந்த பயணி தெரிவிக்கிறார்.
அந்தப் பயணி ஆட்டோ ஏற , ஆட்டோக்காரர் ஐயா நீங்களே இந்த ஊருக்கு புதுசு இன்றைக்கு மட்டும் தான் இந்த ஊரில் இருப்பீர்கள் பின்னே எப்படி அந்த அம்மா கிட்ட நாளைக்கு வந்து கழிக்கிறேன் என்று சொன்னீர்கள் என்று ஆட்டோக்காரர் கேட்க..
பயணி நாம் பிரபலமான ஓட்டலில் சாப்பிட்டு இருந்தால் இதைவிட அதிகமாக பில் வந்து இருக்கும்.
அந்த அம்மாவை பார்த்தால் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது இது அவர்களுக்கு ஏதாவது உதவிக்காக பயன்படும்.
ஆட்டக்கார ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்துகிறார்.
எவ்வளவுப்பா என்ற அந்த பயணி கேட்கிறார்,
உடனே ஆட்டோக்காரர் இன்றைக்கு நாள் முழுவதும் பயணம் செய்தது ரூபாய் 350 ஆகிறது ஐயா
பயணி இந்த 500 மீதி சில்லறை கொடு
உடனே அந்த ஆட்டோக்காரர் இந்தாங்க ஐயா என்று 200 ரூபாய் தருகிறார்.
என்னையா என்று அந்த பயணி கேட்க ஐயா என்கிட்ட 50 ரூபாய் சில்லறை இல்லைங்க
ஆட்டோக்காரர் ஐயா அந்த அம்பது ரூபாய் யாருக்காவது நல்லது செய்து விடுங்கள் ஐயா என்று அந்த ஆட்டக்காரர் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
*ஒருவர் நமக்கு நன்மை செய்தால் அந்த நன்மை நாம் மறக்கும் முன்னே அவருக்கு நன்மை செய்து கடந்திட வேண்டும். *
_*மற்றவர்கள் துன்பப்படுவதை பார்க்கும் ஆவல் நமக்கு இருக்கிறது.*_
_*மேலும் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் நமக்கு இல்லை.*_
_*மற்றவர்கள் துன்பப்பட வேண்டும் என்று எண்ணுபவன் தனக்குத் தானே துன்பத்தை உருவாக்கி கொள்கிறான்.*_
_*தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களுக்கு என்ன நிகழவேண்டும் என்று விரும்புகின்றோமோ அதுவே நமக்கு நிகழும்.*_
_*மனிதன் துணிகளை மாற்றிக்கொள்கிறான், வீட்டை மாற்றிக் கொள்கிறான், நண்பர்களையும் மாற்றிக் கொள்கிறான், ஆனால் கவலையில் ஏன் வாழ்கிறான்.*_
_*ஏனெனில், மனிதன் அனைத்தையும் மாற்றுகின்றான் ஆனால் தன்னைத்தான் மாற்றிக் கொள்ளவில்லை.*_

No comments:

Post a Comment