Monday 4 March 2024

காட்டில் உள்ள நட்சத்திரம்.

 காட்டில் உள்ள நட்சத்திரம்.

ஆனந்த் அம்பானியின் திருமண விழா குறித்து பலரும் பேசி வரும் நிலையில், அவரின் மேற்பார்வையில் தொடங்கப்பட்டு, மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் 'வனதாரா' குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வனதாரா என்பது குஜராத் ஜாம்நகர் பகுதியில், 3000 ஏக்கரில் பறந்து விரிந்து இருக்கும் வனவிலங்குகளுக்கான ஒரு அற்புதமான புகலிடம் ஆகும். ரிலையன்ஸ் பவுண்டேஷனின் நிதி உதவியோடு, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியால் இது மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வனதாரா என்றால் 'காட்டில் உள்ள நட்சத்திரம்' என்று பொருள்படும்.
200க்கும் மேற்பட்ட யானைகள், சிங்கம், புலி, சிறுத்தை என 300க்கும் மேற்பட்ட பெரிய பூனைகள். முதலைகள், பாம்புகள் என நூற்றுக்கணக்கான ஊர்வன வகைகள், என இந்த பாதுகாப்பு மையத்தில் பல்வகை விலங்குகள் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.
யானைகளுக்கு என்றே பல்நோக்கு மருத்துவமனை கூட இங்கு செயல்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சிம்லாவில் இருந்து இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு யானைகளுக்காக ஆப்பிள் பழங்கள் இங்கே வருகின்றன. மிகச்சிறந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட சத்துமிக்க உணவு வகைகள், ஒவ்வொரு விலங்குகளுக்கும் என்ன தேவை என்பதை கண்டறிந்து இங்கே வழங்குகிறார்கள்.
காடுகளில் இருக்கும், கைவிடப்பட்ட, காயப்பட்ட, உடல்நிலை சரியில்லாத, ஊனமுற்ற என பல சவால்களை சந்திக்கும் விலங்கினங்கள் பல இங்கே கொண்டு வரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த வனத்தாரா திட்டம் தான் என்னுடைய உயிர் ஒவ்வொரு உயிரினத்திலும் இறைவன் இருக்கிறான் என்பது நம்முடைய நம்பிக்கை. நம்முடைய கலாச்சாரத்தை பேணி காப்பது நம்முடைய மிக முக்கிய கடமை. என் தாத்தா திருபாய் அம்பானியும், என் தாய் தந்தையரும் எனக்கு அதை தான் சொல்லித் தந்துள்ளார்கள். விலங்குகளோடு இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். இந்த யானைகள் எல்லாம் என் மீது காட்டும் பாசம் அபரிதமானது. தெய்வ நம்பிக்கைதான், என் உடல் ரீதியான சவால்களை மீறி என்னை காத்து நிற்கிறது" என்கிறார் ஆனந்த் அம்பானி. இவர் தான் உள்ளத்தளவிலும் உண்மையான கோடீஸ்வரர்.
திருமணம் சிறப்பாக நடைப்பெற்று ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ பிரார்த்தனைகள்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
நன்றி லெட்சுமணன் செட்டியார்


No comments:

Post a Comment