Wednesday 27 March 2024

வெற்றியின் ரகசியம் . .

 வெற்றியின் ரகசியம் . .

_*கையாளும் விதத்தில் கையாண்டால் நம் கையை விட்டு எதுவும் போகாது.*_
_*பொருளோ உறவோ அல்லது வேறு எதுவோ அதை மிக கவனமாக கையாளுங்கள்.*_
எலிஸபெத் குப்ளர் ரோஸ்
என்ற அறிஞர்
சோதனைகள் வரும் போது ஒவ்வொரு மனிதனும் நான்கு நிலைகளைக்
கடக்க வேண்டி இருப்பதாகக் கூறுகிறார்.
முதல் நிலை அந்தச் சோதனையை ஒத்துக் கொள்ளவே
முடியாத ஒரு வித ஜடநிலை.
இரண்டாவது நாம் மறுப்பதால் சோதனை நீங்கி விடும் என்று எதிர்பார்க்கும் நிலை.
மூன்றாவதாக சோதனைகள் நீங்காததைக் கண்டு சோகமடையும் நிலை.
நான்காவதாக நடந்ததை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காண முற்படும் நிலை.
முதல் மூன்று நிலைகளை எந்த அளவுக்கு சீக்கிரமாகக் கடந்து
நான்காம் நிலைக்கு வந்து செயல்பட ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் புத்திசாலிகளாகிறோம்.
சோதனைகள் வரும் போது வருத்தப்படுவது இயல்பே. ஏன் இப்படி நேர்ந்தது என்ற கேள்வி நமக்குள் எழுவதும் சகஜமே. ஆனால் வருத்தத்தாலும் புலம்பலாலும் எதுவும் மாறப் போவதில்லை என்பதை உணர்வது முக்கியம்.
சோதனைகள் வரும் போது உலகம் நமக்கு எதிராகச் செயல்படுகிறது என்கிற தீர்மானத்திற்கு வருவது தவறு. குற்றம் சொல்லிச் சுட்டிக் காட்டிக் கொண்டு நிற்கும் போது நாம் காப்பாற்றப்படுவதில்லை.
எலிஸபெத் குப்ளர் ரோஸ் கூறுவது போல "ஆனது ஆகி விட்டது;
இதற்குத் தீர்வு என்ன"
என்று சிந்தித்துச் செயல்படத்
துவங்கும் போது தான்
சோதனைகளில் இருந்து விடுபடுதல் சாத்தியமாகிறது.
சோதனைகளைக் காலடிக்குத் தள்ளி அவற்றின் மூலம் உயரக் கற்றுக் கொள்வதே வெற்றியின் ரகசியம்.
பயன்படுத்தும் வித்தை தெரிந்தால் வாழ்க்கையில்
எதுவுமே வீண் அல்ல. எல்லாவற்றில் இருந்தும் நாம் கற்றுக் கொள்ள முடியும். சோதனைகளிலும் நம் சாதனைகளுக்கான விதைகளைக் காண முடியும். ஒவ்வொன்றின் மூலமாகவும் நாம் உயரக் கற்றுக் கொண்டால் வானம் கூட நமக்கு எட்டி விடும் தூரம் தான்.
_*எலிப்பொறி உணர்த்தும் தத்துவம் என்னவென்றால்.*_
_*சிரமப்படாமல் கிடைக்கும்*_ _*அனைத்தையும்*_
_*சந்தேகப்படு என்பது தான்.*_
_*அழகானவர்கள் நம்மை ஈர்ப்பார்கள்.*_
_*ஆனால்.*_
_*அன்பானவர்கள் தான் நம்முடன் இருப்பார்கள்.*_
_*தைரியமா தூங்குங்க.*_
_*தைரியமா எழுந்திரிங்கன்னு.*_
_*என்ன தான் மத்தவங்களுக்கு சொன்னாலும் நாம் செய்த செயலின் பயம் நம்மை தூங்க விடாது, நிம்மதியா எழுந்திரிக்க விடாது.*_
_*பயமில்லாமல் காட்டிக்கொள்வதே பயம் தான்.*

No comments:

Post a Comment