Saturday 26 February 2022

மாநகர் மதுரையின் புதிய மேயராக எங்கள் திருநகர் இந்திரா காந்தி அவர்கள் வரவேண்டும் என முழு முயற்சி.

 மாநகர் மதுரையின் புதிய மேயராக எங்கள் திருநகர் இந்திரா காந்தி அவர்கள் வரவேண்டும் என முழு முயற்சி.

வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய நகர் மதுரை திருநகர்.
இதன் சாலைக் கட்டமைப்பு, நேர்த்தியான நகரமைப்பு, பெரிய அளவிலான அண்ணா பூங்கா. அருகில் மதுரைக் கோட்ஸ் ஊழியர்களுக்கு முன்னுரிமையுடன் உருவான பாண்டியன் நகர், ஹார்விபட்டி என அனைத்து சமூக மக்களும் ஒன்றுபட்டு வாழும் பகுதியில் உள்ள புதிய 95 ஆவது வார்டு உறுப்பினராக தி மு க சார்பில் தேர்வானவர் பன்முகத் திறன் கொண்ட இந்திரா காந்தி அவர்கள்.
இவர் சட்ட நுணுக்கங்களை கற்றறிந்தவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் மூன்றாண்டு காலம் இருந்தவர், திருநகர் பேரூராட்சி சேர்மனாக சிறப்பாகப் பணியாற்றியவர், மைய அரசுப் பணியில் இருந்தவர், பணி நிறைவுக்குப் பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் பணி ஆற்றிவரும் பேராற்றல் மிக்க பெண்மணி.
இவர்களது கணவர்
எல்.கிருஷ்ணசாமி அவர்கள் தமிழக அரசுப் போக்குவரத்து கழக மேனாள் பொது மேலாளர், மற்றும் ஜெயிண்ட்ஸ் அமைப்பு, மக்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகளில் முக்கியப் பங்கு வகித்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
மதுரையின் புதிய மேயராக இவரைத் தேர்வு செய்ய வேண்டும் என தலைமையிடம் முயற்சி செய்து வரும் நிலையில் இன்று திருநகர் பேரூராட்சி, கூட்டுறவு வீடு கட்டும் சங்கம், சவிதாபாய் மேல்நிலைப் பள்ளி, டவுன் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் கால் நூற்றாண்டுகள் தலைவராகப் பணியாற்றிய கே. ராமன் செட்டியார் அவர்களின் மகன் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம், பாண்டியன் நகர் அருள்மிகு கல்யாண விநாயகர் கோவில் நிர்வாகி, மதுரை ஹைடெக் அராய் நிறுவன மக்கள் தொடர்பாளர், எக்ஸனோரா அமைப்பின் முன்னோடி வ. சண்முகசுந்தரம், திருநகர் அருள்மிகு சித்தி விநாயகர் கோவில் மேனாள் தக்கார், திருநகர் மக்கள் மன்றச் செயலாளர், பொறியாளர்
வீ. கிருஷ்ணமூர்த்தி, தி மு க முன்னோடி எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பொதுநல அமைப்பினர் தங்களின் பேரார்வத்தை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தனது அனுபவத்தை மதுரை மேயர் பணியில் செயல்படுத்த வேண்டும் என்று நூல்களைப் பரிசாக வழங்கி வாழ்த்துத் தெரிவித்த தருணம்.
அருகில் அலமேலு சொக்கலிங்கம் திருநகர் ராஜ்குமார் உள்ளனா் .
வாழிய மக்கள் பணி.


No comments:

Post a Comment