Wednesday 9 February 2022

மேம்படுத்துவதில் கவனம்.

 மேம்படுத்துவதில் கவனம்.

இந்த உலகில் ஒவ்வொருவருமே, ஒரு தனித் திறமையுடன் பிறக்கின்றனர். ஒருவருக்கு நல்ல நினைவுத் திறன் இருக்கலாம், ஒருவருக்கு விளையாட்டுத் திறன் இருக்கலாம், ஒருவருக்கு குரல் வளம் இருக்கலாம், ஒருவருக்குச் சிறந்த ஆராய்ச்சித் திறன் இருக்கலாம், ஒருவருக்கு நல்ல தோற்றப் பொலிவு இருக்கலாம். தனது தனித்திறமையை இளமையிலேயே கண்டுகொண்ட ஒருவர், வாழ்வில் நல்ல உயரத்தை எட்டுகிறார். ஆனால், இதுபோன்றவர்கள் குறைவாகவே உள்ளனர்.
தோல்வியடைந்தவர்கள், தங்களின் குறைகளையும், தங்களின் சுற்றத்தையும் குறைகூறிக் கொண்டே இருந்து விடுவார்கள்.
சச்சின் டெண்டுல்கரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அவர் சராசரியைவிட குறைவான உயரம் கொண்டவர், ஆனாலும் தனது பேட்டிங் திறமையை சரியான நேரத்தில் அவர் அடையாளம் கண்டதால், அவர் இன்று இந்தளவிற்குப் பிரபலமாகியுள்ளார்.
நாம் கண்ட மற்றும் காணும் பல பிரபலங்கள் தன்னகத்தே பல குறைகளை உடையவர்கள். ஆனாலும் குறைகளை ஒதுக்கித்தள்ளி, நிறைகளைக் கண்டு, அவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் இன்று பெரிய மனிதர்களாக வந்துள்ளனர்.
எனவே குறைகளை மறப்போம். நிறைகளை மட்டுமே நினைப்போம். வாழ்வில் வெற்றியடைவோம்.

No comments:

Post a Comment