Saturday 26 February 2022

மகிமைமிக்க சிவராத்திரி...* 01.03.2022

 மகிமைமிக்க சிவராத்திரி...*

01.03.2022
சிவன் என்றாலே அன்பு. அதனால் பெரியோர்கள் அன்பே சிவம் என்கின்றனர். சிவனுடைய கதைகளை தேடிப் பயணப்பட்ட போது, அவரின் அடியார்கள் பலரின் கதைகள் தான் கிடைத்தன. அதில் சிவனின் அடியவர்களின் ஏகப்பட்ட திருவிளையாடல்கள் நிரம்பியுள்ளது. சித்தர்கள், சிவனடியார்கள், நாயன்மார்கள் என எல்லோரின் கதைகளிலும் அன்பே மேலோங்கி கானப்படுகின்றது.அந்த சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரியின் மகிமைகளை பல கதைகள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். சிவராத்திரியைப் பற்றியும், அன்று செய்ய வேண்டிய செயல்கள் பற்றியும் இப்பொழுது குறிப்பிடுகின்றேன்.
*🌷 சிவராத்திரி வகைகள்:*
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை நாட்களின் போது வரும் சதுர்த்தசி நாட்களில் வருவது நித்திய சிவராத்திரி.
தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது பக்ஷ சிவராத்திரி.
திங்கட்கிழமைகளில் *(சோமவாரம்)* பகல், இரவு ஆகிய இரு பொழுதுகளிலும் அமாவசை இருந்தால் அது யோக சிவராத்திரி.
ஆண்டுதோறும் மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவதுதான் மகா சிவராத்திரி.
*🌷 சிவராத்திரியன்று வழிபடுவது எப்படி?*
சிவராத்திரியன்று தேவாரம், திருமுறைகள், சிவபுராணம் ஆகியவற்றை படிப்பது நலம். ருத்ரம், சமகம் போன்றவற்ரை ஜபித்தாலோ அல்லது வீட்டில் டேப்ரிக்கார்டரில் போட்டுக் கேட்பதாலோ மன அமைதியோடு வீட்டிலும் அமைதி நிலவும்.
பில்வாஷ்டகம், லிங்காஷ்டகம், வேத பாராயணம், சிவனடியார்களின் வரலாறு, தேவாரம், பெரியபுராணம், சித்தர்களின் கதைகள் இவற்றில் ஏதாவது ஒன்றை படிப்பதாலோ, இல்லை கேட்பதாலோ எண்ணற்ற பல நன்மைகள் நம்மை வந்து சேரும்.
இதைச் செய்ய இயலாதவர்கள் சிவநாமத்தை உச்சரித்து கோவிலுக்கு சென்று ஒரு கால பூஜையை தரிசிக்கலாம். ஏழை, எழியவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்கிறது பெரியபுராணம். அதிலும் ஒருவருடைய பசியை போக்குபவனுக்கு பரமனின் அருள் கிடைப்பதாகவும் கூறுகிறது.
சிவம் என்றால் சுபம். சங்கரன் என்றால் சுபத்தை உண்டாக்குபவன். சிவனுக்குப் பிரியம் அளிக்கும் மங்கள ராத்திரிதான் சிவராத்திரி.
*🌺 சிவராத்திரி அபிஷேக ஆராதனைகள்*
*முதல் ஜாமத்தில்-*
பஞ்சகவ்ய அவிஷேகம், சந்தனம், வில்வம், தாமரைப்பூ அலங்காரம், அர்ச்சனை. பச்சைப் பயறு பொங்கல் நிவேதனம். ருக்வேத பாராயணம்.
*இரண்டாம் ஜாமத்தில்-*
சர்க்கரை, பால், தயிர், நெய், கலந்த ரஸபஞ்சாமிர்தம் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல், துளசி அலங்காரம், தாமரைப்பூ அர்ச்சனை, நிவேதனமாக பாயசம், யஜுர்வேத பாராயணம்.
*மூன்றாம் ஜாமத்தில்-*
தேன் அபிசேகம், பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகைப்பூ அலங்காரம், வில்வ அர்ச்சனை, எள் சாதம் நிவேதனம், சாமவேத பாராயணம்.
*நான்காம் ஜாமத்தில்-*
கருப் பஞ்சாறு அபிசேகம், நந்தியாவட்டைமலர் மலர், அல்லி, நீலோற்பவ மலர் அலங்காரம் அர்ச்சனை, நிவேதனமாக சுத்தமான அன்னம், அதர்வண வேத பாராயணம்.

No comments:

Post a Comment