Monday 22 February 2021

பணத்தால் அனைத்தையும் வாங்க முடியும்..!

 பணத்தால் அனைத்தையும் வாங்க முடியும்..!

ஆனால்
ஒருபோதும் உங்களுடைய மரியாதை கௌரவம் நேர்மை
இந்த மூன்றையும் தலைகீழ் நின்றாலும் வாங்க முடியாது.
இப்போது கஷ்டப்பட்டால்,பின்னாளில் நல்லா இருப்பாய் என்பர்...சரிதான்,அப்போது அனைத்தும் இருக்கும்...ஆனால் வயது இருக்காது...இன்றைய வாழ்வையும் வாழ்வதற்கு மறந்துவிடாதே...!
சிந்தனை அதிகமாகும் போது பேச்சும் அதிகமாகும், அதை யாரிடமும் புரியவைக்க தேவையில்லாத போது பேச்சுக்கள் குறைகின்றது...!!!
தவறு செய்கிறார்கள் என்று நாம் வெறுக்க ஆரம்பித்தால்...... வாழ்க்கையில் யாரையும் நாம் நேசிக்கவே முடியாது...... எனவே நாம் விட்டுக் கொடுத்து தான் போக வேண்டும்...
நாம் வாழும் இந்த உலகில்
விலைமதிப்பில்லாதது.....
நம்மிடம்
இருப்பவை அல்ல. நம்மோடு
இருப்பவர்கள் தான்
குறள் : கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.
பொருள் : நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
இங்கு உணர்ச்சி
இருப்பவைகளுக்கு
மதிப்பு கொடுப்பதில்லை
உணர்ச்சி
அற்றவைகளுக்கே
மதிப்பு கொடுக்கின்றன
உதாரணம் பணம்
நமது வாழ்வில் எதுவும் நிலையானது கிடையாது என்பதை உணர ஆரம்பித்து விட்டால் போதும்..!!
நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்..!!
கோபத்தில் நிதானமும், குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும், தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும் வாழ்க்கையை இனிதாக்கும் 😍😍
வாழ்க்கை என்பது
வாழ்ந்த வரை வாழ்வதல்ல....
வாழப்போகும் வரை
வாழ்வது தான் வாழ்க்கை...
வலிகளும், வழிகளும்
நிறைந்தது தான் வாழ்க்கை..
தெளிந்த சிந்தையோடு
நாம் செயல்பட்டால் மட்டுமே
சரியான பாதையில் பயணிக்க
முடியும்..
நம் வாழ்க்கையில் சத்தோஷம்
என்பது சிரித்துக்கொண்டு இருக்கும்
வரையில் தான்
கஷ்டம் என்பது அழுது கொண்டு
இருக்கும் வரையில் தான்
என்பதை உணர்ந்துவிட்டால்
வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்....
வாழ்க்கையில் நடைபெறும்
எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுங்கள்..
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம்
இருக்கிறது கற்றுக் கொள்வதற்கு.!

No comments:

Post a Comment