Tuesday 23 February 2021

போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்..

போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்..
புதுச்சேரி துணைநிலை ஆளுநரான கிரண் பேடி, சில நாள்களுக்கு முன் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக தெலங்கானாவின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கூடுதலாக அந்தப் பொறுப்பை கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவிக்க, தமிழிசை அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை விமான நிலையத்தில், இது குறித்து பேட்டியளித்தார். அப்போது, ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்க பிரதமர் மோடி, கிரண்பேடியை அனுப்பியிருந்தார். இப்போது அந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தமிழிசையை அனுப்பியுள்ளார். கிருஷ்ணரை கொல்ல பெண்களைத்தான் பல்வேறு உருவங்களில் அனுப்பினர். ஆனால், எல்லா முறையும் கிருஷ்ணர் தப்பித்தார். பெண்கள்தான் தப்பிக்கவில்லை. அதுதான் தற்போது கிரண்பேடிக்கு நடந்துள்ளது. அடுத்து தமிழிசைக்கு என்ன நேரப்போகிறது என்று தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
அரசியல் அரங்கில் காட்சிகள் மாறிக்கொண்டேதான் இருக்கும். புதுச்சேரியிலும் அப்படி ஓர் அரசியல் மாற்றம் நடந்திருக்கிறது. ஆனால், துணைநிலை ஆளுநர், ஆளுநர் என்ற பொறுப்புகளில் இருப்பவர்களையும், `பெண்கள்' என்றே சுருக்கிப் பார்க்கிறார் கே.எஸ்.அழகிரி.
இத்தனை ஆண்டுக்கால அரசியல் அனுபவம்கூட அவரை நெறிப்படுத்தவில்லை என்பது துயரம்.
அதிலும், கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டிருக்கும் இதிகாச உதாரணம், இன்னும் கொடூரம். கிருஷ்ணரை கொல்ல அனுப்பப்பட்ட பெண்களை, கிரண் பேடி, தமிழிசை சௌந்தரராஜனோடு ஒப்பீடு செய்திருக்கிறார்.
சதி வேலைகளுக்காக அனுப்பப்படும் மாயவேலைக்காரர்கள் பெண்கள் என்ற தன் ஆழ்ந்த நம்பிக்கையை இன்னும் வெளிப்படுத்தும் விதமாக, `கிருஷ்ணரைக் கொல்ல பெண்களைத்தான் பல்வேறு உருவங்களில் அனுப்பினர்' என்றிருக்கிறார் இந்த கே.எஸ்.அழகிரி.
இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார் கே.எஸ்.அழகிரி. ஒவ்வொரு முறையும் கிருஷ்ணர்தான் ஜெயித்தாராம், பெண்கள் தப்பிக்கவில்லையாம்.
மேலும், கிருஷ்ணரை அழிக்க வந்த பெண்களுக்கு நேர்ந்ததுதான் கிரண் பேடி, தமிழிசைக்கும் நடக்கும் என்றும் எச்சரிக்கை விட்டிருக்கிறார்.
இங்கு ஜெகம் காக்க வந்த கிருஷ்ணர் யார்.? என்று தெரியவில்லை. ஆனால், அழிக்க புதுச்சேரிக்கு வந்தவர்கள், பெண்கள்.
கே.எஸ்.அழகிரிகளே... பெண்களை கீழ்மையானவர்களாகச் சித்திரிக்கும் இதுபோன்ற வார்த்தைகளை, உதாரணங்களை, கருத்துகளை எல்லாம் அரசியல் அரங்குகளில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
கிரண் பேடியோ, தமிழிசை சௌந்தரராஜனோ பெண்கள் என்பதாலேயே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதல்ல. வகித்த பொறுப்புகள், அரசியல் செயல்பாடுகள், கொள்கைகள், செயல்பாடுகள் என அவர்களை அவர்களின் நடவடிக்கைகளின் அடிப்படையில் விமர்சியுங்கள். ஆனால், `பெண்களா இருந்துக்கிட்டு...' என பாலினம் ரீதியாக அவர்களை விமர்சிக்கும் வார்த்தைகள், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு அழகா?
நீங்கள் சார்ந்திருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஒரு பெண்தானே?
தாங்களின் கருத்துப்படி சதி வேலைகளுக்காக அனுப்பப்படும் மாயவேலைக்காரர்கள்தான் பெண்கள் என்றால்.தாங்கள் கட்சிதலைவி சோனியா இத்தாலியில் இருந்து இந்தியா வந்து அரசியில் செய்வதும் அதுதான் காரணமாக இருக்கும் என்பது மட்டும் தாங்களுக்கு தெரியாமல் போனது ஏன்..?
அவரால்தான் இந்த சொகுசு வாழ்க்கை தாங்கள் வாழ முடிகிறது என்பதால் அதற்கு மட்டும் விதிவிலக்கா..?இப்படி எல்லாம் பேசி,நடித்து இந்த சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு பதில்...?
குறிப்பு; கண்டனங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்வது என்பது குற்றங்களைக் குறைக்கும் கருவிகளில் ஒன்று. அந்த வகையில், கே.எஸ்.அழகிரியின் வார்த்தைகளுக்கான எதிர்ப்பைப் பதிவு செய்வது, கடமையாகிறது.
ஏதோ பெண்களின் பாதுகாவலர்களே நாங்கள்தான் என எதிர்கட்சியினரின் செயல்களுக்கு மட்டும் எதிராக குரல் கொடுக்கும்,திமுக கனிமொழி,காங்கிரஸ் ஜோதிமணி எம்பிக்கள் ஏன் இதற்கு குரல் கொடுக்கவில்லை.?
மேலும், பெண்கள் சதிவேலைகளுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுபவர்கள், பெண்களால் ஒருபோதும் ஜெயிக்க முடியாது என்ற கே.எஸ்.அழகிரியின் நம்பிக்கை இன்றே பாண்டிச்சேரியில் பொய்த்துப் போனது.
இனியாவது அவர் குணம் பெறுவார் என்றும் நம்புவோம்..


No comments:

Post a Comment