Saturday 27 February 2021

கலைவாணர் ஒரு கதை சொல்லுவார். அதை நானும் பல தடவை மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.

 கலைவாணர் ஒரு கதை சொல்லுவார். அதை நானும் பல தடவை மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.

நோயுற்ற ஒருவன், ஒரு வைத்தியாரிடம் போனான், "ஐயா எனக்கு இன்ன நோய், அதற்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்” என்று கேட்டான், அந்த சித்த மருத்துவன் ஒரு லேகியத்தை எடுத்துக் கொடுத்தான். நல்லது ஐயா! இந்த லேகியத்தை சாப்பிடும் போது ஏதாவது பத்தியம் உண்டா” என்று கேட்டான் அந்த நோயாளி. பத்தியம் வேறொன்றுமில்லை, லேகியத்தைச் சாப்பிடும் போது குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது; அவ்வளவு தான்" என்று மருத்துவன் சொன்னான்.
நடந்து அவ்வளவுதான், பிறகு, அவன் எப்போது லேகியத்தை எடுத்தாலும், எதிரே குரங்கு வந்து நிற்பது போல் தோன்றும்.
கடைசி வரையில் அவன் சாப்பிட முடியவில்லை ஏன்? 'குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது' என்று வைத்தியன் சொன்னது அவன் மனத்தில் பதிந்து விட்ட காரணத்தால், லேகியத்தைத் தொட்டாலே அவனுக்குக் குரங்கு ஞாபகம் வரத் தொடங்கிற்று. லேகியத்திற்கும், குரங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா அவன் அதைச் சொல்லாமல் இருந்திருந்தால், இவன் அதை நினைக்கப் போகிறானா? கிடையாது, அவன் சொல்லிவிட்ட காரணத்தால், மனது அதைச்
சுற்றியே வட்டமிட்டது. லேகியத்தைத் தொடும் போதெல்லாம் குரங்கு, குரங்கு என்கிற எண்ணமே வந்தது. அதன் விளைவாகக் கடைசி வரை அவனால் அந்த லேகியத்தைச் சாப்பிட முடியவில்லை.
மனது எதற்குக் கேட்கும்: யாரிடம் கேட்கும்? நீ சொன்னால் மனது கேட்க வேண்டும்! அப்படிக் கேட்டால் தான் உனக்குள் அடங்கியது மனது.
மனதுக்குள் அடங்கியவனல்ல மனிதன்! மனிதனுக்குள் அடங்கியது தான் மனது.


No comments:

Post a Comment