Saturday 20 February 2021

மஹாராஷ்ட்ராவில் கொரோனாவின் இரண்டாவது அலை

 மஹாராஷ்ட்ராவில்

கொரோனாவின் இரண்டாவது அலை
கள நிலவரம்
நமக்கான பாடம் இருக்கிறதா?
பார்ப்போம் வாருங்கள்
Dr.A.B. ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
இந்தியாவின் முக்கியமான நகரமயமாக்கல் அதிகம் நிகழ்ந்த மாநிலம் - மஹாராஷ்ட்ரா
இந்தியாவில் எந்த தொற்று நோயும் கொள்ளை நோயாக உருவெடுக்க ஏத்த சூழல் உள்ள மாநிலம் அது.
மேலும் மஹாராஷ்ட்ராவில் என்ன நடக்கிறதோ அது தமிழகம் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் அடுத்து நிகழலாம் என்ற எண்ணம் மற்றும் எச்சரிக்கை உணர்வு நமக்கு வர வேண்டும்.
மஹாராஷ்ட்ராவில் என்ன நடக்கிறது ?
நேற்று வியாழக்கிழமை கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பிறகு
5000 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மும்பை நகரில் மட்டும் 736 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் ( ISOLATION)
திருமணங்கள் போன்றவற்றில் கோவிட் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது
அமராவதி மற்றும் யவட்மால் ஆகிய இரு பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்திற்கு கடும் கெடுபடியை அரசு விதித்துள்ளது.
இதில் அமராவதியில் வரும் சனிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை "லாக் டவுன்" அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை நகர நிர்வாகம் உள்ளூர் ரயில் பெட்டிகளில் மக்கள் முறையாக முகக்கவசம் அணிகிறார்களா? என்பதைக் கண்காணிக்க முந்நூறு போலீசார் கொண்ட தனிப்படையை அமைத்துள்ளது.
இவர்கள் அன்றாடம் 25000 ஒழுங்குமீறல்காரர்களை அடையாளம் கண்டு அபராதம் விதிக்க வேண்டும் என்று இலக்கு வேறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்
திருமண வைபவங்கள் நிகழும் கூடங்கள், உணவகங்கள், கேளிக்கை மையங்களில் திடீரென ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
ஒரு கட்டிடத்தில் ஐந்து தொற்றாளர்களுக்கு மேல் அடையாளம் காணப்பட்டால் அந்த கட்டடம் சீல் வைக்கப்படுகிறது.
வீட்டில் தனிமைப்பட்டுத்தப்படும் மக்களுக்கு மீண்டும் கைகளில் "சீல்" குத்தப்படுகின்றது.
அமராவதி பகுதியில்
மார்கெட்டுகள் , நீச்சல் குளங்கள், உள்விளையாட்டரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன.
மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் ஐந்து பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதியில்லை
யவட்மாலில் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகள் மூடப்படும்.
உணவகங்கள் மற்றும் திருமண வைபவங்கள் 50% கொள்ளளவுடன் மட்டுமே நடைபெறும்
ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து குழும தடை விதிக்கப்பட்டுள்ளது
நிச்சயமாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களின் தாக்கம் இனி நம்மிடையே தெரிய ஆரம்பிக்கும் என்றே நான் நம்புகிறேன்
தென் ஆப்பிரிக்க உருமாற்றம்
பிரிட்டன் உருமாற்றம்
பிரேசில் உருமாற்றம்
கலிபோர்னியா உருமாற்றம்
ஆகியவை உள்ளபடியே
கவலை தரக்கூடிய உருமாற்றங்களாகும்
தமிழ்நாட்டை விட மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள மாநிலம் மஹாராஷ்ட்ரா
அங்கு நடக்கிறது என்றால் நமக்கு அது எச்சரிக்கை மணியாகும்.
தயவு கூர்ந்து நம் மக்கள் அனைவரையும்
முகக்கவசம் பேணுதல்
தனிமனித இடைவெளி பேணுதல்
கைகளை கழுவுதல் போன்றவற்றில் சுணக்கம் காட்டாமல் இருக்க வலியுறுத்துகிறேன்
கேட்டுக்கொள்கிறேன்
அலட்சியத்தை விட
எச்சரிக்கை உணர்வு சிறந்தது
நன்றி
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

No comments:

Post a Comment