Monday 22 February 2021

தெளிவான வழியில் செல்வதே நம்பிக்கை.

 தெளிவான வழியில் செல்வதே நம்பிக்கை.

எல்லாம் ஒழுங்காக நடக்க, நீங்கள் நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.
எதுவுமே ஒழுங்காக நடக்காதிருக்கும் போதும்,நீங்கள் தைரியமாக வாழ்ந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !
நீங்கள் நினைப்பதெல்லாம் உங்களுக்கு நடக்க நீங்கள் பலமாக உணர்ந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.
நீங்கள் நினைக்காத பயங்கரங்கள் உங்களுக்கு நடந்தாலும் நீங்கள் அசராமலிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !
உற்றாரும் பிறரும் உங்களுக்கு உதவி செய்ய,
நீங்கள் நிதானமாக இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை.
உங்களுக்கு உதவ யாருமே
தயாராக இல்லாத சமயத்திலும்
நீங்க பக்குவத்தோடிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !
எல்லோரும் உங்களைக் கொண்டாட, நீங்கள் சந்தோஷமாக
இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.
எல்லோரும் உங்களை அவமதித்து ஒதுக்கித் தள்ள
அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
உங்கள் முயற்சிகளெல்லாம் வெற்றியடைய நீங்கள் அழகாகத் திட்டமிட்டால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.
உங்களுடைய எல்லா முயற்சிகளும்
தோல்வியடைய, அதிலிருந்து பாடம் கற்று நீங்கள் முயன்று கொண்டேயிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
எல்லோரும் உங்களுக்கு நம்பகமாக நடக்க, நீங்கள் தெளிவாய் முடிவெடுத்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை.
உங்களுக்கு வேண்டியவரெல்லாம்
உங்கள் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க
நீங்கள் தெளிவான வழியில் சென்றால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
உங்களிடத்தில் எல்லாம் இருக்க,
நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை.
உங்களிடத்தில் எதுவுமே இல்லாத பட்சத்தில், நீங்கள் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படாமல் இருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை.

No comments:

Post a Comment