Wednesday 24 February 2021

குஜராத் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் பாஜக பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது.மீண்டும் அனைத்து மாநகராட்சிகளையும் கைபற்றும் சூழலில் உள்ளது.

 குஜராத் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் பாஜக பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது.மீண்டும் அனைத்து மாநகராட்சிகளையும் கைபற்றும் சூழலில் உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மாநகராட்சிகள் பாஜக வசமே இருந்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்வர் விஜய் ரூபானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். விறுவிறுப்பாக நடந்த இந்த தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
இந்தநிலையில் 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே பாஜக பல வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 236 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 49 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
அம்மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான அகமதாபாத் மகாநகராட்சியில் மொத்தமுள்ள 192 இடங்களில் 81 வார்டுகளில் பாஜக முன்னிலை பெறுள்ளது. காங்கிரஸ் 15 இடங்களில் மட்டுமே முன்னிலை பெறுள்ளது.
அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் என 6 மாநகராட்சிகளிலும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது.
குறிப்பு;இரண்டுதினங்களுக்கு முன்பு பஞ்சாபில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை என்ற தகவலை உடனுக்கு உடன் தமிழக ஊடகங்கள் பதிவு செய்தன.ஆனால் குஜராத்தில் தொடர்ந்து பாஜக ஆட்சியி்ல் இருக்கும் போதும் மீண்டும் மீண்டும் பாஜக அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவதை,தமிழக ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை..!


No comments:

Post a Comment