Monday 23 November 2020

மோசடிகள் விண்ணை எட்டுகிறது.

 பெங்களூர் ஐ.எம்.ஏ நிதி நிறுவனத்தின் ரூ2 ஆயிரம் கோடி மோசடி வழக்கில், கர்நாடகா முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரோஷன் பெய்க்கை சிபிஐ கைது செய்தது..

பெங்களூர் சிவாஜி நகரில் செயல்பட்டு வந்த ஐ.எம்.ஏ நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மன்சூர் அலிகான், நிதி நிறுவனத்துடன் நகைக்கடையும் நடத்தி வந்தான். இந்தியா மட்டுமின்றி, வெளி நாடுகளை சேர்ந்தவர்களையும் ஈர்த்த மன்சூர்கான், தனது நிதி நிறுவனத்தின் முதலீடு செய்பவர்களுக்கு அதிகளவு லாபத்தொகை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தான். ஆனால், கூறியபடி லாபத்தொகையை கொடுக்காமல் நிறுவனத்தை மூடிவிட்டு துபாய்க்கு தப்பி சென்றான்.
இவன் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களிடம் இருந்து ரூ2000 கோடிக்கும் அதிகமான மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக மன்சூர்கானை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அவன் ஐ.எம்.ஏ மோசடியில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்ற வீடியோ ஒன்றை வெளிநாட்டில் இருந்தே வெளியிட்டான்.
அதில், 'முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரோஷன் பெய்கிற்கு ரூ400 கோடி வரை வழங்கினேன். விலையுயர்ந்த கார்களை பரிசாக வாங்கி கொடுத்தேன்,' என்று கூறினான். இதையடுத்து சூடுபிடித்த இந்த விவகாரம் எஸ்.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. அதிரடியாக சிலரை எஸ்.ஐ.டி கைது செய்து விசாரித்தனர்.
ஆனால், அப்போது எதிர்க்கட்சியில் இருந்த பாஜ.வும், பாதிக்கப்பட்ட மக்களும் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும்படி கூறினர்.
ஆனால், அப்போதைய காங்கிரஸ் கூட்டணி கட்சி இதை ஏற்று கொள்ளவில்லை.
இந்நேரத்தில் திடீரென்று ஆட்சி கலைந்து, பாஜ கட்சி பொறுப்பு ஏற்றது. முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைத்தார்.
இதை ஏற்று வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ அதிகாரிகள் மன்சூர்கான் உள்பட அவனது கூட்டாளிகள், உதவியாளர்கள் என பலரை அடுத்தடுத்து கைது செய்தனர். ஆனால், ரோஷன் பெய்க் மட்டும் கைதாகவில்லை.
இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் பெங்களூர் சி.பி.ஐ அதிகாரிகள் ரோஷன் பெய்க்கின் வீட்டிற்கு ரகசியமாக சென்றது மட்டுமின்றி, அவனை ஹெப்பாளில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கும் அழைத்து சென்றனர்.
அங்கு ரகசிய அறையில் வைத்து அவனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். ரோஷன் பெய்க் கொடுத்த தகவலை வாக்குமூலமாக பதிவு செய்துள்ள சி.பி.ஐ அதிகாரிகள், இரவு 7 மணியளவில் அவனை அதிரடியாக கைது செய்து சி.பி.ஐ நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
குறிப்பு;காங்கிரஸ் கட்சி இஸ்லாமியருடன் கூட்டு வைக்கும் நோக்கம் இதுதானோ.?

No comments:

Post a Comment