Thursday 12 November 2020

சித்தர்க்கு அருள்செய்த முத்தமிழ் குமரா...

 சித்தர்க்கு அருள்செய்த

முத்தமிழ் குமரா...
சிந்தைக்குள் நடமாடும்
செந்தமிழ் அழகா...
பக்திக்கு வரமாகும்
பைந்தமிழ் தலைவா
சக்திக்கு மகனான
சந்திர வதனா...(சித்தர்க்கு...)
ஆராதனை செய்ய
ஓடோடி வந்தோம்
தீராதவை சொல்லித்
தீரென்று நின்றோம்
கூறாததும் கண்டு
நேராக்க வேண்டும்
மாறாதவை தன்னை
நீமாற்ற வேண்டும்...(சித்தர்க்கு...)
அறமென்ற ஒன்றினை
அகற்றிடத் திரியும்
குறையுள்ள கூட்டமுன்
குறியென அறிக...
திறமுள்ள சிந்தனை
திரண்டிடப் புரிக
கறையுள்ள மாந்தரை
களைந்திட வருக....(சித்தர்க்கு...)
மாற்றார்க்குத் துணைபோகும்
மாந்தரைக் கண்டோம்
வேற்றாக்கிக் குறைகூறும்
வீணரைக் கண்டோம்
நாற்றுக்குள் களைதீர்க்க
நீவர வேண்டும்
கூற்றாகித் விடம்போக்க
வேல்வர வேண்டும்....(சித்தர்க்கு...)

No comments:

Post a Comment