Saturday 21 November 2020

இந்தோனேசியா பற்றிய சுவாரசியமான விஷயங்கள்

 இந்தோனேசியா பற்றிய சுவாரசியமான விஷயங்கள்

இஸ்லாமிய நாடுகளில் ஒரு இஸ்லாமியர் வேறு மதத்திற்கு மாறமுடியும் என்றால் அது இந்தோனேஷியாவில் மட்டும்தான். மற்ற எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் இஸ்லாமைப் புறக்கணிப்பது தண்டனைக்குரிய குற்றம்.
இந்தோனேசிய இந்துக்கள் என்றால் உடனே நம் நியாபகத்திற்கு வருவது பாலிதான் இங்கு தான் 83% இந்துக்கள் வாழ்கின்றார்கள், ஆனாலும் கிழக்கு ஜாவா பகுதியும் இந்துக்கள் கணிசமாக இருக்கின்றார்கள்.
பிரம்பானான் கோவிலும் இங்கு தான் இருக்கின்றது.
ஒன்பதாம் நூற்றாண்டில் இந்து மதத்தை பரப்புவதற்க்காக மும்மூர்த்திகளுக்காக கட்டப்பட்ட கோவில். பின்னர் காலப்போக்கில் சிதைந்த இந்த கோவிலை 1913இல் புனரமைக்க துவங்கி 1953 மூலக்கோவிலை கட்டிமுடித்தார்கள்.
Prambanan - Wikipedia
இந்தோனேசிய இஸ்லாமியர்கள் தங்களின் பெயரை முழுவதும் அரபு சாயலில் வைக்காமல் தங்களின் மூதாதையர்களை நினைவுகூறும் வகையில் இந்துப் பெயரையும் வைத்திருப்பார்கள்.
போரோபுதூர்
உலகின் மிகப்பெரிய புத்த கோவிலும் இங்குதான் இருக்கின்றது ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
போரோபுதூர் - தமிழ் விக்கிப்பீடியா
உலகிலேயே அதிக அளவு எரிமலைகள் உள்ள நாடும் இந்தோனேசியா தான் 147 எரிமலைகள் இருக்கின்றது அதில் 127 எரிமலைகள் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றது.
உலகிலேயே அதிகமாக நிலநடுக்கம் ஏற்படுவதும் இங்கு தான்
நாம் உபயோகிக்கும் நிறைய மசாலாப் பொருள்களின் தாயகமும் இந்தோனேசியாதான், ஐரோப்பியர்கள் கடல்வழியை கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை இந்தோனேசியா மசாலா மற்றும் நறுமணப் பொருள்கள் இந்திய வாணிபர்களின் வழியாகத்தான் மேற்குலகை அடைந்தது.
Spice trade - Wikipedia
The Origin Of Herbs And Spices | Everyday Health
உலகில் மிகப்பெரிய பல்லி இனமான கொமோடோ டிராகனின் வாழிடமும் இந்தோனேசியா தான்
கொமோடோ டிராகன் - தமிழ் விக்கிப்பீடியா
ஒராங்குட்டான் குரங்குகளின் தாயகமும் இந்தோனேசியா தான். ஓராங் ஊத்தான் என்பது மலாய் மற்றும் இந்தோனேசிய மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது. இது காட்டு மனிதன் எனப் பொருள் தரும்
ஒராங்குட்டான் - தமிழ் விக்கிப்பீடியா
இந்தோனேசியா உலகில் உள்ள மழைக்காடுகள் அமேசான் மழைக்காடுகளுக்கு அடுத்து பருவநிலையைக் காக்க முக்கியப் பங்கு வகிக்கின்றது. உலகில் உள்ள 10 - 15% மரங்கள் மற்றும் விலங்குகளின் வாழிடமாக இருந்தது.
Indonesian Forests & Palm Oil
Rainforest Facts – Official Orangutan Foundation International Site
2007-2009 இந்த ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் தனது IE 7 browser ஐ பிரபலப்படுத்த நீங்கள் IE 7 browser ஐ இன்ஸ்டால் செய்தால் சுமத்ராவில் ஒரு மரம் நடுவோம் என்று சொல்லுவார்கள் (இது என் நினைவில் இருக்கின்றது வேறு யாரும் அப்படிப் பார்த்திருந்தால் அதைப் பற்றிய கருத்துக்களை எழுதலாம்). தற்பொழுது வேறு நிறுவனம் இந்த செயலைச் செய்கின்றது
Ecosia - the search engine that plants trees
ஆனால் சமீப காலமாக எண்ணெய் மரங்கள் வைப்பதற்காக இந்த மழைக்காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டார்கள் (8,400 சதுரகிலோமீட்டர்கள் காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றது).
இந்தோனேசியா தான் உலகின் மிக பெரிய செம்பனை எண்ணெய் (Palm oil) உற்பத்தியாளர்.
Palm oil - Wikipedia
நன்றி லெட்சுமணன் செட்டியார்

No comments:

Post a Comment