Tuesday 17 November 2020

இளம் வயதில் மரணம்.

 சிதம்பர ரகசியம்...?

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாக வலம் வந்த திருச்சி வாசன் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் அருண் தற்கொலை..
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு நெருக்கமாக இருந்தவர் டாக்டர் அருண்.
இவரது முயற்சியால், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்னர் வாசன் குழுமம் துவக்கப்பட்டது. முதலில் மருந்துக்கடை மட்டும் தொடங்கப்பட்டது.
பின்னர், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு, 170-க்கும் மேற்பட்ட கண் மருத்துவமனை, 30 -க்கும் அதிகமான பல் மருத்துவமனைகள் என கிளைகள் உருவானது.
இதனால், இவரது புகழும், சொத்து மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனையடுத்து, இந்தியாவின், 244-வது பணக்காரர் என பட்டியலில் டாக்டர் அருண் இடம் பிடித்தார்.
இந்த நிலையில், வாசன் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் அருண் திடீரென தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதுவும் கார்த்தி சிதம்பரம் பிறந்த நாளின் போது இந்த தற்கொலை நடைபெற்றுள்ளது.
டாக்டர் அருணின் தற்கொலைக்கான காரணம் (ப) சிதம்பர ரகசியமாக உள்ளது.
தினகரன் போன்ற திமுக நாளேடுகள் மாரடைப்பால் மரணம் என பதிவு செய்துள்ளது.
சில நாளேடுகள் தற்கொலை என பதிவு செய்துள்ளன.
தமிழக முக்கிய அரசியல்வாதிகளின் பினாமி தொழில் அதிபர்களின் மரணங்கள் தொடர்கதையாகவும்,மர்மமானதாகவும்,காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாமலும் போவது ஏன்..?எப்படி?எதனால்..?
(ஸ்டாலின் நண்பர் அண்ணாநகர் ரமேஷ்,
ஆ. ராசா நண்பர் ஷாகுல் ஹமீது போன்ற பிரபலங்களின் நண்பர்கள் மரணம் வரிசையில்
பிரபல வாசன் கண் மருத்துவமனை & வாசன் மெடிக்கல்ஸ் Dr. அருண் மரணம்)


No comments:

Post a Comment