Thursday 12 November 2020

வாழ்க்கை உணர்த்தும் பாடம்.

 வாழ்க்கை உணர்த்தும் பாடம்.

இனி நீ படிக்க லாயக்கே இல்லை! என்று உங்களை யாராவது சொல்கிறார்களா? – இதைக் கொஞ்ச படிங்க‌
வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி எடுக்கும் முடிவுகளும் முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம்.
ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்து விட்டது. “இப்பள்ளியில் பத்துவருஷமாப் படிச்சிரு க்கே; ஒரு பாடத்துல கூட பாஸாகலை. வகுப்புல பாடம் நடத்தும்போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சு கிட்டிருந்தியா?ன்னு கோபமாக திட்டினார்.
அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். “இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பிவிட்டார்.
அந்தப்பையன் தெருவில் இறங்கி நடந்தான். “உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. ஒரு புதிய சிந்தனை உருவானது. தலைமையா சிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். அதன் பெயர் இயர் மஃப்
பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.
அச்சமயம் முதல்உலகப்போர் ஆரம்பமானது. பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர்மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி உத்தரவிட்டார். போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானார். அவர்தான் *செஸ்டர் கீரின்வுட்*.
சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியானமுறையில் பயன்படுத்தியதால் முன்னேறினார்.
ஆகவே உங்களை யாராவது இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று சொன்னால், ஆமா நான் படிக்க லாயக்கில்லை ஆனால் சாதிக்க லாயக்கு, என்று சொல்லிவிட்டு, சமயோசிதமாக செயல் பட்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
GS Srinivasan, Kalichelvam Duraipandi and 9 others
5 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment