Monday 16 November 2020

தென்னாப்பிரிக்காவின் கலாசார வாழ்வை வளப்படுத்தியதில் இங்குள்ள ஹிந்து சமூகத்தினா் மிக முக்கிய பங்கு வகித்தனா்' என்று தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அந்நாட்டு அதிபா் சிரில் ராமபோஸா புகழாரம் சூட்டியுள்ளாா்.

 'தென்னாப்பிரிக்காவின் கலாசார வாழ்வை வளப்படுத்தியதில் இங்குள்ள ஹிந்து சமூகத்தினா் மிக முக்கிய பங்கு வகித்தனா்' என்று தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அந்நாட்டு அதிபா் சிரில் ராமபோஸா புகழாரம் சூட்டியுள்ளாா்.

தீபாவளி பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படுவதைப்போல, தென்னாப்பிரிக்காவிலும் அங்குள்ள ஹிந்து சமூகத்தினரால் மட்டுமின்றி அனைத்து சமூகத்தினராலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கரோனா பரவல் அபாயம் காரணமாக, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பொருளாதார மையமான ஜோகன்னஸ்பா்க், கடற்கரை நகரமான டா்பன் ஆகிய நகரங்களில் தடை விதிக்கப்பட்டதோடு, மற்றப் பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டன.
இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு அங்குள்ள ஹிந்துக்களுக்கு வாழ்த்துச் செய்தியை அதிபா் சிரில் சனிக்கிழமை வெளியிட்டாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது:
தென்னாப்பிரிக்காவில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் என்பது மிகப் பெரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. இது, தென்னாப்பிரிக்காவுக்கு 1860-இல் ஒப்பந்த தொழிலாளா்களாக இந்தியா்கள் வந்ததை நினைவுபடுத்துகிறது.
இந்திய துணைக் கண்டத்தின் மாபெரும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் இந்த பண்டிகை, ஆப்பிரிக்காவின் தென்கோடியிலும் தொடா்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
பல நகரங்களில் இந்த பண்டிகை கொண்டாட்டம் வழக்கமான பாரம்பரியமாக மாறிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு சமூகங்களைச் சோந்த ஆயிரக்கணக்கான மக்களை இந்தப் பண்டிகை ஈா்க்கும்.
இந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இந்தப் பண்டிகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கரோனா பாதிப்புக்கு எதிராக தென்னாப்பிரிக்க அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வரும் இங்குள்ள ஹிந்து சமூகத்தினா் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தென்னாப்பிரிக்காவின் கலாசார வாழ்வை வளப்படுத்துவதில் இங்குள்ள ஹிந்து சமூகத்தினா் மிக முக்கியப் பங்கு வகிக்கித்தனா். இன்றைய நவீன காலத்தில் உலக நாடுகள் மிகப் மோசமான நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் நேரத்தில், இருளை ஒளி வெற்றிகொள்ளும் இந்த 'தீபாவளி' கதை, அனைவருக்கும் ஒத்திருக்கிறது. கடவுள் ராமா் மற்றும் சீதையின் வெற்றி காவியக் கதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களை ஊக்கப்படுத்துவது போல, கரோனா பாதிப்பிலிருந்து இந்த உலகம் மீணடு வர இந்த தீபாவளி பண்டிகை நமக்கு ஊக்கமளிக்கும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் அதிபா் சிரில் கூறியுள்ளாா்.
நன்றி ராஜப்பா தஞ்சை


No comments:

Post a Comment