Saturday 28 November 2020

நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்

 "நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"

"ஒவ்வொருவரின் பார்வைக்கும் உள்ள வேறுபாடு"
ஒரு பாதையின் ஓரம் யோகி ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார்.
அப்போது அந்த வழியே ஒரு மது அருந்தியவன் வந்தான்.
தியானத்தில் ஆழ்ந்து இருந்த யோகியை பார்த்து,
''இவனும் நம்மை மாதிரி பெரிய போதைக்காரன் போலிருக்கிறது.
இன்றைக்கு அளவுக்கு மீறி குடித்திருப்பான். அதனால்தான் சுய நினைவில்லாமல் இங்கே கிடக்கிறான்,''
என்று சொல்லிக் கொண்டே கடந்து போனான்.
அடுத்து ஒரு திருடன் அந்த வழியே வந்தான்.
அவன் அவரைப் பாரத்தவுடன்,
''இவன் நம்மைப்போல ஒரு திருடன் போலிருக்கிறது.
இரவெல்லாம் திருடிவிட்டு களைப்பு மிகுதியால் நினைவில்லாமல் தூங்குகிறான், பாவம்,'' என்று கூறியவாறு அங்கிருந்து அகன்றான்.
பின்னர் ஞானி ஒருவர் அங்கு வந்தார்.
அவர், ''இவரும் நம்மைப் போல ஒரு ஞானியாகத்தான் இருக்க வேண்டும். தியானத்தில்
இருக்கும் இவரை நாம் தொந்தரவு செய்யலாகாது,''
என்று நினைத்தவாறு தன் பாதையில் சென்றார்.
இவ்வுலகில் நல்லவர்கள் தங்களைப்போல் அடுத்தவரையும் நல்லவராகவே பார்க்கின்றனர்.
தீயவர்கள் தங்களைப்போல் அடுத்தவரையும் தீயவராகவே பார்க்கின்றனர்.
"தூய மனம் உடையவர் எல்லாவற்றையும் தூயதாகவே காண்பார்"

No comments:

Post a Comment