Monday 16 November 2020

*தீபாவளி....*

 *தீபாவளி....*

எத்தனையோ விழா நாட்கள் இருந்தாலும், பெருந் திருவிழாக்களில் ஒன்று தீபாவளி பண்டிகை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று..
வழக்கமானப் பதிவுகள், வழக்கமான விவாதங்கள், தீபாவளி தமிழர் பண்டிகையா.? என்று தொடங்கி... பட்டாசு வெடிக்கும் நேரம், பேருந்து கூடுதல் கட்டணம் .. என்று விவாதங்கள் களை கட்டும்..
தீபாவளிக்கான காரணம் பற்றி அலசி ஆராயப்படும்.
நரகாசுரனை வதம் செய்த நாள்தான் தீபாவளி..
மகாவீரர் முக்தி அடைந்த நாளே இந்நாள்.
ஸ்ரீராமன் சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாள்..
பார்வதி தேவி மேற்கொண்ட கேதார கௌரி விரம் முடிவுற்ற நாள்..
தீபம் + ஆவளி ..
தீபங்களின் வரிசையே தீபாவளி.
இவ்வாறான பல காரணங்கள் தீபாவளிக்கு உண்டு..
ஆனால்..
யதார்த்தம் என்னவென்றால், மேற்கூறிய எந்த ஒரு காரணத்திற்கவும் இன்று நம்மவர்கள் தீபாவளியை கொண்டாடவில்லை.
ஒரே காரணம்...
மகிழ்ச்சி.....
வருடத்திற்கொரு நாள், தனது சொந்த ஊருக்குச் சென்று தனது கிராமத்தில் தனது சொந்தங்களுடன் உற்சாகமாக செலவிடும் ஒரு நாள்தான் இது.
தாய் தந்தைக்கு புத்தாடை எடுத்துச் செல்வதில் மகனுக்கு மகிழ்ச்சி. குழந்தைக்கு எடுப்பதில் பெற்றோருக்கு பெருமிதம். அக்கா, தம்பிக்கு எடுப்பார். அண்ணன் தங்கைக்கு எடுப்பார். தாத்தா பாட்டி மற்ற மற்ற சொந்தங்கள். விருந்து, பட்டாசு, இன்ன பிற வகைகளினால் அந்த ஒரு நாள் சந்தோசம்.. பெருமிதம்..
ஒரு சில ஊர்ககளில் தனது முன்னோர்களின் நினைவு நாளாக கொண்டாடும் வழக்கமும் உள்ளது. நீத்தார்களை தனது இல்லத்திற்கு அழைத்து அவர்களது ஆசியை பெறலாம் என ஒரு நம்பிக்கை..
இந்த ஒரு நாள்தான் தீபாவளி..
மறுநாள் அவர்களின் வழக்கமான பணிகளுக்காக, தீபாவளி நாள் அனுபவங்களை சுமந்துகொண்டே பயணிக்கிறார்கள்.
அவ்வளவுதான் தீபாவளி...
-----------------------
தீபாவளிக் குறித்து சில தொல்லியல்த் தகவல்கள்..
தீபாவளி எப்போதிருந்து கொண்டாடப்படுகிறது.?
சான்றுகள் அதிகம் இல்லை என்றாலும்..
கி.பி. 7 ஆம் நூற்றாண்டில்.. ஹர்சவர்த்தனர் எழுதிய நாகானந்தம் என்னும் நூலில் தீபஉற்சவம் என்று தீபங்களின் அணிவரிசை குறிப்பிடப்படுகிறது.
கி.பி. 939 -967 வரை ஆட்சி செய்த இராஷ்டிரக்கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் செப்பேடு.
பார்வதி தேவி கோயிலில் விளக்கேற்றும் உற்சவத்தை தீபாவளி என்று குறிப்பிட்டு தானம் வழங்கியுள்ளனர்.
கி.பி. 10 நூற்றாண்டு..
பிரபலமான Saundatti inscription. மகாவீரர் முக்தியடைந்த நாளை தீபம் ஏற்றி தீபாவளியாக கொண்டாட எண்ணெய் தானம் வழங்கப்பட்டது.
11 ஆம் நூற்றாண்டு.
பாரசீகப்பயணி அல்ஃபருனி அவர்கள் எழுதிய பயணக்கட்டுரை ஒன்றில்.. கோவில்கள், வீடுகளில் விளக்கேற்றி புத்தாடை அணிந்து தீபாவளி கொண்டாடினார்கள்..
இந்தத் தொல்லியல் ஆவணங்களில் தீபாவளி நாள் எது என்பதையும் அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
New moon in the month of karthika..
அதாவது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளை தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளனர்..
அதாவது இன்று நாம் கொண்டாடும் திருக்கார்த்திகை நாளைத்தான் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால்..
இன்று நாம் ஐப்பசி மாத அமாவாசை நாளை தீபாவளியாகக் கொண்டாடடுகிறோம். இன்றிலிருந்து 15 ம் நாள்தான் திருக்கார்த்திகை..
இந்த 15 நாள் பின்னடைவு எவ்வாறு வந்தது என்று தெரியவில்லை.
கி.பி. 1117 ல் சாளுக்கிய அரசன் ஒருவர், சாத்யமர் என்னும் அறிஞர் ஒருவருக்கு தீபாவளி பரிசு வழங்கியதாக ஒரு கல்வெட்டு செய்தி உண்டு என்கிறார்கள்.
தமிழகத்தில்..
காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் கல்வெட்டு.
விஜயநகர சதாசிவராயர் காலம்.
கி.பி. 1558.
கோவிலில் நூறுநாட்கள் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றி மிக விரிவானத் தகவல் உள்ளது.
மார்கழித்திருநாள், தைத்திருநாள், ஆழ்வார் திருநாள், திருக்கார்த்திகை, தீவிளித் திருநாள்.. என்று விழாக்கள் கொண்டாடப்பட்டன.
தீவிளி நாள் என்பது இன்றைய தீபாவளியே என்பது பெரும்பாலான
ஆய்வாளர்கள் முடிவு.
இந்த நாளுக்கு வழங்கப்பட்ட நிவந்தங்களின் பட்டியல்..
திருமுன் குத்து விளக்கேற்றுவதற்கு நெய்.. அமுது செய்ய அரிசி , பயிறு, நெய்.
கறியமது பொறிக்க நெய், மிளகு, சீரகம், வெந்தயம், புளி ,தயிர்.
பலகாரங்களின் பட்டியல்...
அப்பப்பம், அதிரசம், கொதி, வடை, சுகியான், தோசை, பணியாரம்..
இந்த கல்வெட்டுச்சான்றே தமிழகத்தில் தீபாவளி பண்டிகை என்பதன் முதல் சான்று என்பது அறிஞர்கள் முடிவு...
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி
வாழ்த்துகள்
...
Refrence ..
1. Studies in the religious life of ancient medival india. P. 128 - 129
2. Religious institutions and cults in the decon
A.D. 600- 1000 P.38

No comments:

Post a Comment