Wednesday 16 November 2022

பாராட்டி மகிழ்வோம். மாணிக்கராஜா குமரப்பன் அமெரிக்க நாட்டின் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தேர்வு ! USTA எனப்படும் யுனைடெட் ஸ்டேட்ஸ் டென்னிஸ் அசோசியேசன் எனும் அமைப்பு ஏழு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டது. இந்த அமைப்பு அமெரிக்காவில் டென்னிஸ் விளையாட்டை ஊக்கப்படுத்தி மேலும் வளர்ச்சியடைய செய்யஆண்டுதோறும் 18 வயதுக்கு மேல் 40 வயதுக்கு மேல் 55 வயதுக்கு மேல் என்ற மூன்று பிரிவுகளில் பல்வேறு அளவில் போட்டிகளை நடத்தி இறுதியாக மாநில அளவிலான போட்டிகளை நடத்துகிறது. மாநில அளவில் வெற்றி பெற்ற முதல் இரண்டு வீரர்களை தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்கிறது. வடக்கு கரோலினா மாநிலத்தில் 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் நடைபெற்ற டென்னிஸ் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் கலிபோர்னியாவில் வசித்து வரும் மாணிக்கராஜா குமரப்பன் மாநில அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் புளோரிடாவில் நடைபெற உள்ள அமெரிக்க நாட்டின் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் பங்குபெற உள்ளார். இவர் கண்டவராயன்பட்டி தமிழ்ச் செம்மல் பேரா. முனைவர் சே.குமரப்பனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணிக்க ராஜாவிற்கு வாழ்த்துக்கள் !!


 

No comments:

Post a Comment