Friday 18 November 2022

*எச்சரிக்கை உச்சகட்ட எச்சரிக்கை

 *எச்சரிக்கை உச்சகட்ட எச்சரிக்கை

😘
*சிவகங்கையில் மொபைல் ரீசார்ஜ் கடை வைத்திருக்கும் எனது நண்பரை பார்க்க இரண்டு நபர்கள் வந்திருக்கின்றனர். இதுவரை பார்த்திராத புதிய முகங்கள்..*
*இனி நண்பர் நடந்த சம்பவத்தை கூறுகிறார்.*
*"வணக்கம் தம்பீ..... கூகுள் பேல பணம் அனுப்பனும் ரொம்ப அர்ச்ஜன்ட்" இரண்டு நபர்களில் ஒருவர் பேசினார்.*
*இன்னொருவர் முகம் அவரசத்திற்கான பரபரப்பு ஏதுமின்றி தெனாவட்டாக இருந்தது...*
*"எவ்வளவு அனுப்பனும்?"*
*"ஒரு லட்சம் தம்பி..."*
*"இவ்ளோ பணமெல்லாம் அனுப்ப முடியாது... வேணும்ணா பேங்க் மூலம் .அனுப்புங்க... "*
*"நாங்க மதுர தம்பி இங்க எப்புடி அனுப்புரதுன்னு தெரியல..."*
*"இல்லேன்னா மணி டிரான்ஸ்பர் எக்சேஞ்ச் ஆபிஸ் அட்ரஸ் சொல்றேன் அங்க போயி அனுப்புங்க..."*
*"தம்பி அங்கெயெல்லாம் போயிட்டு வந்திட்டோம் லீவாம்... இன்னொரு ஆபீஸ் அடச்சிருக்கு... ரொம்ப அவசரம் தம்பி... தேனில எம் மருமவன் பைக் ஆக்ஸிடன்ட் ஆகி பிரவேட் ஆஸ்பத்திரில இருக்காப்ல.. பணங்கட்டினாத்தான் ஆப்பரேசனாம்... எம்மக அழுவுரா தம்பீ... எப்படியாச்சாம் உதவிபண்ணுங்க.... இதுக்கு எவ்வளவு சார்ஜோ எடுத்துக்கங்க..."*
*"பத்தாயிரமுனாகூட பரவாயில்ல...." கூட வந்து தெனாவட்டு ஒத்தூதினார்.*
*இந்த இடத்தில் யோசிக்க ஆரம்பித்தேன். அவரசத்திற்கு உதவி என்பது இயல்பான ஒன்று. அதற்கு பத்தாயிரம் கூலியா?... ஏதோ ஒரு தவறு நடக்கப்போவதாய் மனம் உறுத்தவே....*
*"எனது ஆப்பில் பத்தாயிரத்திற்கு மேல அனுப்ப முடியாது.... மன்னிக்கவும் வேற இடத்தில ட்ரை பண்ணுங்க"*
*"நான் அப்பவே சொன்னேன் கேட்டியா ... இவரெல்லாம் அதுக்கு சரிப்பட மாட்டாருன்னு.... சும்மா நேரத்தையும் காலத்தையும் வேஸ்டு பண்ணிக்கிட்டு... வாய்யா வந்து தொலையா... வேற எடமா இல்ல... வெட்டி கத பேசுராரு இவருக்கிட்ட போயி...." படபடவென பொரிந்தபடி தெனாவட்டு நடையை கட்டவே இந்த நபரும் அவர் பின்னாலேயே போய்விட்டார்.*
*ஒருபடியாக பிரச்சனை ஓய்தது என நினைத்தாலும் பத்தாயிரம் சொழையா போயிருச்சே என்ற வருத்தம் மனசுக்குள்...*
*இரண்டு வாரம் கழித்து.....*
*காளையார்கோவிலில் செல்போன் ரீசார்ஜ் மட்டும் ஸ்பேர்பார்ட்ஸ் வைத்திருக்கும் கடை ஓனரை போதைப்பொருள் தடுப்பு அதிரடி காவல்துறையினர் கைது செய்கின்றனர்.*
*நடந்தது இதுதான்....*
*இந்த இரண்டு நபர்களும் கஞ்சா வியாபாரிகள். கஞ்சா கொள்முதல் செய்வதற்காக மொத்த வியாபாரிக்கு பணம் அனுப்புகிறார்கள்....*
*எப்படியென்றால்? எந்த தடயமும் இல்லாமல் அனுப்ப வேண்டும். அதற்கு இன்னொருவரின் Gpay, PhonePe மூலம் அனுப்பினால் எவிடன்ஸ் இல்லாமல் தப்பிக்கலாம்.* *மாட்டினால் பணம் அனுப்பியவருக்குத் தான் பிரச்சனை.*
*முடிவில் கஞ்சா மூட்டை போலீசார் ரோந்தில் மாட்டிவிடுகிறது. இந்த வழக்கில் வியாபாரிகள் சிக்கியதோடு பணம் அனுப்பிய செல் ரீசார்ஜ் கடைக்காரரையும் மாட்டி விடுகின்றனர்.*
*இப்போது அந்த கடைகாருக்கு எவ்வளவு மன உலைச்சல்... நண்பர்கள், மற்றும் சொந்த பந்தங்களுக்கு இடையே எத்தனை கெட்ட பெயர். ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு இன்று இரண்டு லட்சங்களுக்கு மேல் செலவாகியும் இன்னும் வழக்கு முடியவில்லையாம்.*
*ஆகவே நண்பர்களே....*
*தெரிந்தவர்கள் மற்றும் வியாபார கடைகள் தவிர முன்பின் அறியாத எவராக இருந்தாலும் பத்து ரூபாய் கூட உங்களது Gpay, PhonePe ஐ பயன்படுத்தி பணம் அனுப்பாதீர்கள். இது போன்ற தேவையற்ற சிக்கல்கள் வரக்கூடும். அது போக உங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு பைசா கூட இல்லாமல் சுரண்டி எடுத்து விடுவார்கள். இப்படியொரு நூதன கொள்ளை சமீப காலமாக நடந்து வருகிறது. எதிலும் கவனமாக இருங்கள்.*

No comments:

Post a Comment