Thursday 17 November 2022

தோல்வியைப் பெருமைப்படுத்தல்.

 தோல்வியைப் பெருமைப்படுத்தல்.

*மாயூரம் வேதநாயகம் பிள்ளை* அவர்கள் நல்ல அறிஞர்.
*'பிரதாபமுதலியார் சரித்திரம்'* - என்ற நாவலை முதன்முதல் எழுதியவர். கடந்த நூற்றாண்டில் புதினம் எழுதிய பெருமை
அவரைச் சாரும்.
அக்கதையில், முதலியார் குதிரைப் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். மற்றும் எட்டுப் பேருடன் இவரும் குதிரைமேல் ஏறி ஓட்டுகிறார். குதிரைவேகமாக ஓடுகிறது. எல்லாக் குதிரைகளும் பந்தயத்தில் விரைவாக ஓடின. முதலியார் குதிரை தான் 9-வது குதிரையாக வந்தது.
எல்லாரும் சிரித்தார்கள்.
தன் குதிரையைக் கையில் பிடித்துக்கொண்டே சிரித்த மக்களிடம் வந்து, என் குதிரை கடைசியாக வந்தது எனக்கும்தெரியும், உங்களுக்கும் தெரியும். ஆனால் இந்த தொத்தக் குதிரையைப் பார்த்து நல்ல குதிரைகள் ஏன் மிரண்டு ஓடின என்பதுதான் தெரியவில்லை என்றார்.
இதைக் கேட்டதும் எல்லோருமே ஆரவாரத்துடன் சிரித்து மகிழ்ந்தனர். இது நகைச்சுவை.
ஆனால் கருத்து மிக ஆழம்.
"தோல்வியைக் கண்டு அஞ்சாமையும் தோல்வியையே பெருமைப்படுத்தி மகிழ்வதும் மக்காளய்ப் பிறந்தவர்கட்கு மிகவும் தேவை"* என்பது அவரது கருத்து.
*"இடுக்கண் வருங்கால் நகுக"* என்பார் திருவள்ளுவர்.*
*நம் வாழ்வில் இதுபோல துன்பம் வரும்போதெல்லாம் இதனை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.*

No comments:

Post a Comment