Saturday 12 November 2022

மதுரை திண்டுக்கல் அருகில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் நேற்று மாலை நடைபெற்ற 36 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 75 ஆம் ஆண்டு விழாவில் பட்டையைக் கிளப்பிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.


மதுரை திண்டுக்கல் அருகில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் நேற்று மாலை நடைபெற்ற 36 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 75 ஆம் ஆண்டு விழாவில் பட்டையைக் கிளப்பிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
அதன் வேந்தராக நாணயமும் நா நயமும் நிறைந்த நகரத்தார் சமூகத்தின் துடிப்பான இளைஞர் மேலைச்சிவபுரி டாக்டர் கும. அண்ணாமலை அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பாக கல்விப் பணி ஆற்றி வருகின்றார்.
*திண்டுக்கல்லில் நமது பாரதப் பிரதமர் ஆற்றிய உரை*
மிகவும் முக்கியமான காலத்தில் நீங்கள் பட்டம் பெறுகிறீர்கள்.
காந்தியின் கனவுகளுக்கு சவால் நிறைந்த காலம் இது.
தென்னிந்திய மொழிகளை அனைவரும் கற்க வேண்டும், அதிலும் தமிழைக் கற்க வேண்டும் எனச் சொன்னவர் காந்தி
காந்தியை நீண்ட காலமாக மறந்துவிட்டார்கள்.
கடந்த 8 ஆண்டுகளில் காதி விற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
கதர் என்பது சர்வதேச ஆடையாக மாறிவிட்டது.
கிராமத்தின் ஆன்மா.. நகரத்தின் வளர்ச்சி (தமிழில் கூறினார் நமது பாரதப் பிரதமர்)
கிராம உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுயசார்பு பாரதம் திட்டத்தில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சுதேசி இயக்கத்தின் மையப் புள்ளி தமிழ்நாடு.
தேச நலன் விவகாரத்தில் தமிழகம் எப்போதும் முதலிடத்தில் உள்ளது.
கிராமங்களில் இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
இயற்கை விவசாயம் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம் கிராமங்களும் தன்னிறைவு பெற முடியும்.
கிராமப் பெண்களின் வெற்றி, தேசத்தின் வெற்றி
- பிரதமர் மோடி
விழாவில் தமிழக முதல்வர் மாண்புமிகு
மு க. ஸ்டாலின், ஆளுமை மிக்க ஆளுநர் ஆர் என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலை வகித்தனர்.
பா ஜ க மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தமிழக அமைச்சர்கள், மற்றும் விருந்தினர்கள்,
மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம், வேந்தர் அவர்களின் தகப்பனார் குமரப்பன் செட்டியார் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவில் இசைஞானி இளையராஜா, உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்குப் பிரதமர் மோடி டாக்டர் பட்டம் வழங்கிப் பாராட்டினார்.
மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்.
பேராசிரியர்கள், அலுவலர்கள் சிறந்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
குறிப்பாக நமது விருந்தினர்களை பல்கலைக்கழகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள வி. லெட்சுமிபுரம் டாக்டர் அண. ரெங்கநாதன், முனைவர் த. ரவிச்சந்திரன் மற்றும் டெல்லி உன்னிக் கிருஷ்ணன் நன்கு வழிகாட்டி உதவினர்.
மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத அளவுக்கு இருந்தது.
வாயிலில் பல்லாயிரம் மக்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.
நமது வேந்தர் டாக்டர்
கும. அண்ணாமலை அவர்களின் மிகச்சிறந்த நிர்வாகத் திறனைக் கண்டு தமிழும் சைவமும் வளர்த்த நகரத்தார் இனம் தன் வரலாற்றில் இன்று புதிய சரித்திரம் படைத்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அவரது அழைப்பை ஏற்று இதனை நேரில் கண்டு உளம் மகிழ்ந்தோம்.



















 

No comments:

Post a Comment