Wednesday 9 November 2022

பாராட்டி மகிழ்வோம். சாதனைத் தமிழர் ராம. அண்ணாமலை

 பாராட்டி மகிழ்வோம்.

சாதனைத் தமிழர்
ராம. அண்ணாமலை அவர்கள் வலையபட்டியைச் சேர்ந்தவர்கள்.
(யாழ்பாணத்தார் வீடு)
இரணியூர் கோவில்.
CISCO வில் உயர் பதிவி வகிப்பவர்கள். Networking ல் சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள்.
விமானப் பயணிகள் காத்திருப்பு நேரம் குறைந்திடவும் விமானப் பயணம் தொடர்பான தகவல்கள் மின்னல் வேகத்தில் பெற்றிடவும்
அவர்கள் தலைமையில் பெங்களூரு விமான நிலைய 2 ஆவது பகுதி விரிவாக்கத்தில் கணினி மூலம் இணைய வழியில்
விமான போக்குவரத்தினை மேம்படுத்தி உள்ளார்கள் என்பது நகரத்தாருக்குப் பெருமை.
உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் இது போன்ற மென் பொருள் இணைப்பு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சைவமும் தமிழும் வளர்த்த சமூகம் உலகமயமாக்கலுக்கு ஏற்ப விஞ்ஞான தொழில் நுட்பத் துறையில் தனது மேன்மையைப் பறை சாற்றி வருவது வளரும் தலைமுறைக்கும் நகரத்தார் சங்கத்திற்கும் அளவற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.
வாழிய ராம. அண்ணாமலை பணிகள்.
தொடரட்டும் அவரது பேராற்றல்
பாராட்டி மகிழும் - மனிதத்தேனீ


No comments:

Post a Comment