Monday 28 November 2022

மனதைத் திறந்து வையுங்கள்.

 மனதைத் திறந்து வையுங்கள்.

வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதற்கு அறிவு வளமே அடிதளம். அறிவின் எல்லை விரியும்போது உங்களுடைய வாழ்வின் எல்லையும் விரிகின்றது. அதைத்தான் வளர்ச்சி என்று குறிப்பிடுகின்றோம்.
ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதன் விளைவுதான் முயற்சியும் அதனால் கிடைக்கும் வளர்ச்சியும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பணி முன்னேற்றம், பதவி உயர்வு போன்றவைகளைப் பெறுவதற்கு எவ்வளவு தூரம் விரைவாகவும், கூடுதலாகவும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். அறிவு வளர்ச்சியின் அவசியம் புரியும். ஆகவே புதிய அறிவை வளர்த்துக் கொள்ள மனதை எப்பொழுதும் திறந்து வையுங்கள்.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் புதுப்புது பாடங்களைக் கற்றுக் கொண்டு, அதை முதலீடு செய்து தொடர்ந்து முன்னேறுபவர்களே ஒரு நிறுவனத்தின் நிலையான பலமாக அமைகின்றார்கள்.
மேலும் உங்களுக்குக் கிடைத்துள்ள பதவியையும், அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும்.
தொடர்ந்து முயற்சி செய்யாதவருக்கு வெற்றியும், தொடர்ந்து முயற்சி செய்பவருக்கு ஏற்பட்ட தோல்வியும் நிலையானது அல்ல. ஆகவே, தொடர்ந்து முயலும் இயல்புடைய மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் தொழிற்போட்டிகளை வென்று உங்கள் நிறுவனத்தால் நிலைத்து நிற்க முடியும். நிறுவனம் நிலைத்தால்தான் அதில் பணிபுரியும் உங்களுடைய பணியும் அதனைச் சார்ந்த உங்களுடைய வாழ்வும் நிலைக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

No comments:

Post a Comment