Wednesday 9 November 2022

_*நடந்து பாருங்கள் நண்பர்களே...*_

 _*நடந்து பாருங்கள் நண்பர்களே...*_

_நடக்க நடக்க_
_நமக்குள் நடப்பது_ _என்ன?_
_*நம்ப முடியா ஆச்சரியங்கள் !!!*_
_அடுத்தடுத்து நிகழும் அற்புதங்கள் !!!_
_*அனைத்தும் ஆதாரபூர்வ...*_
_*அறிவியல் உண்மைகள் !!!*_
_நிமிடம் ஒவ்வொன்றிலும்..._
_*நீங்களே உணரலாம்;*_
_*நாள் ஒவ்வொன்றையும்...*_
_நலமாய்த் தொடங்கலாம்..._
_*ஒன்றாம் நிமிடத்திலேயே*_
_ஒவ்வொரு செல்லுக்குள்ளும்..._ _ஓர் ஆற்றல் ஊற்றெடுக்கிறது !!!_
_*அடுத்த நிமிடத்தில்*_
_அங்கம் எங்கும்*_ _ஊக்கத்துடன்..._ _அருவி போல்_ _குருதி பரவுகிறது !!!_
_*மூன்றாம் நிமிடத்திலேயே*_
_மூட்டுக்களின் இறுக்கம்..._ _முற்றிலுமாகத் தளர்கிறது !!!_
_*நான்காம் நிமிடத்தில்*_
_நடை மிக எளிதாகிறது..._
_நாடி சீராகிறது !!!_
_*ஐந்தாம் நிமிடத்தில்*_ _இருபத்து ஐந்து கலோரி_ ஆவியாகிறது...
_யாரும் அறியாமலே !!!_
_*ஆறாம் நிமிடத்திலேயே*_
_அவசியமற்ற கொழுப்பு நீக்கம்... _ஆரம்பம் ஆகிறது !!!_
_*ஏழாம் நிமிடத்தில்*_
_இதயத் துடிப்பு சீராகி..._
_இன்னிசை ஆகிறது !!!_
_*நிமிடம் எட்டில்*_
_நாளங்கள் அனைத்தும்..._
_நெகிழ்ந்து விரிகின்றன !!!_
_*ஒன்பதாம் நிமிடத்தில்*_
_உயிர்வளி எனும் ஆக்ஸிஜன்... உடலெங்கும் நிறைகிறது !!!_
_*பத்தாம் நிமிடத்தில்*_
_மொத்த உடலும் மனமும்... _சுத்தமாகித் தெளிகிறது !!!_
_*பனிரெண்டாம் நிமிடத்தில்*_
_பரவுகிறது உடலெங்கும் - ஓர் _பதமான சூடும் சுகமும் !!!_
_*பதினான்காம் நிமிடத்தில்*_ _பரவிய அகச்சூட்டைத் - _தோல் பாங்காக வெளியேற்ற..._
_*பதினாறாம் நிமிடத்தில்*_
_பேராறாய்ப் பெருகும் வியர்வை..._
_பரிசுத்தமாக்குகிறது உடலை !!!_
_*நிமிடம் பதினெட்டில்*_
_நிரம்பி வழிகிறது மேலும் மேலும்..._
_நிகரில்லா உயிர்வளி !!!_
_*இருபதாம் நிமிடத்தில்*_
_இதுவரை கரையா இறுகிய கொழுப்பும்..._
_இளகத் தொடங்குகிறது !!!_
_*இருபத்தைந்தாம் நிமிடத்தில்*_
_இவ்வளவு புத்துணர்ச்சியா எனக்குள்?_
_என்று மனம் வியக்கிறது !!!_
_*முப்பதாம் நிமிடத்தில்*_
_முழு உடலும் மனமும்..._ _முற்றிலுமாகத் தளர்கின்றன !!!_
_*முப்பந்தைந்தாம் நிமிடத்தில்*_
_மூளையின் மூலை முடுக்கெங்கும்..._
_முகிழ்க்கின்றன மகிழ் சுரப்புகள் !!!_
_*நாற்பதாம் நிமிடத்தில்*_
_நம்மைக் கவ்வியிருந்த மன அழுத்தம்..._
_நமக்கே தெரியாமல் விலகுகிறது !!!_
_*நாற்பத்தைந்தாம் நிமிடத்தில்*_
_நம் மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து..._
_நம்மை ஆட்கொள்கிறது !!!_
_*ஐம்பதாம் நிமிடத்தில்*_
_ஆழ்கடல் போல் பேரமைதி_ _அடைகின்றன_ _உடலும் மனமும் !!!_
_*நிமிடம் ஐம்பத்தைந்தில்*_
_நினைத்துப் பார்க்க முடியாத_
_நிம்மதி நெஞ்சில் நிறைகிறது !!!_
_*அறுபதாம் நிமிடத்தில்*_ _அன்றைய நாளுக்கான ஆற்றல்..._
_அனைத்தும் உங்களுக்குள் !!!_
_உங்களுக்காக..._
_*உங்களுக்காக மட்டுமே -*_
_நீங்கள்_
_உங்களைக்_ _காதலித்து..._
_*ஒதுக்கும் இந்த உன்னத...*_
_*ஒரு மணி நேரம் - உங்கள்*_
_*உடலும் மனமும் பேசும் நேரம் !!!*_
_வெஞ்சினம் குறையும் !!!_
_*வினாக்கள் பல விடையறியும் !!!*_
_வியத்தகு சிந்தனைகள் வித்தாகும் !!!_
_*நடை புதிதாய்;*_
_நாள் புதிதாய்;_
_*நல்லெண்ணங்கள் புதிதாய்...*_
_நறுமலராய் ஒவ்வொரு நாளும் மலரும் !!!_
_*ஆனந்தமாகும் உடலும் மனமும்...*_
_அனுபவித்தால் மட்டுமே - சில அறிவியல் உண்மைகள் புரியும் !!!_
_*நடந்து பாருங்கள்,*_
_நம்புவீர்கள் நான்_ _நவின்றது - உயர்வு_
_நவிற்சியல்ல;_ _நடப்பியல் உண்மை என்று_
_*வாழ்வியல் உண்மைகள் நாம் நலமுடன் வாழ

No comments:

Post a Comment