Monday 28 November 2022

மும்பையில் நடைபெற்ற நகரத்தார் சங்கத்தின் இலக்கியத் திருவிழா.

 மும்பையில் நடைபெற்ற நகரத்தார் சங்கத்தின் இலக்கியத் திருவிழா.

நேற்று மாலை மும்பைப் பெருநகரில் உள்ள முலூண்ட் மேற்குப் பகுதியில் உள்ள நகர விடுதியில் நாராயணன் மீனாட்சி அறக்கட்டளை சார்பில் இலக்கியத் திருவிழா சங்கத் தலைவர் குழிபிறை முரு. இராமசாமி தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் அரிமளம் ஏஆர். செல்லப்பன் வரவேற்புரை ஆற்றினார்.
ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் நெற்குப்பை சேதுராமன் சாத்தப்பன் தொகுப்புரை ஆற்றினார்.
மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் பள்ளத்தூர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
சிரிப்போம் சிந்திப்போம் என்ற தலைப்பில் 85 நிமிடமும்
கவியரசு கண்ணதாசன் குறித்து பனித் துளிக்குள் ஒரு கடல்
என்ற தலைப்பில் 36 நிமிடமும் சிறப்புரை ஆற்றினார்.
நமது செம்மொழித் தமிழுக்கும் வளரும் தலைமுறைக்கும் உரம் சேர்ப்பதாக அமைந்த இந்நிகழ்வில் அரங்கம் நிரம்பிய அளவில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து சிரிப்பலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேனாள் நிர்வாகிகள், சங்கம் வளர்ந்திட உழைத்தவர்கள், செயல் செம்மல்கள், ஆச்சிமார்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
முன்னதாக மீனாட்சி மணிகண்டன், சாந்தி ராமு இறைவணக்கம் பாடினர். தெய்வானை பழனியப்பன் வாழ்த்து ஓவியம் பூங்கொத்து வழங்கினார்.
அரியக்குடி மெய்யப்பன் கவிதை வாழ்த்தினை அவரது சகோதரர் வெங்கடாஜலம் செட்டியார் வாசித்து வழங்கினார்.
மும்பை தமிழ்ச் சங்கத்தின் முன்னோடிகள் பாலு, புவனா வெங்கட் நிகழ்வு குறித்து கருத்துரை வழங்கினர்.
இரவு உணவுடன் நிறைவு பெற்றது.














No comments:

Post a Comment