Tuesday 15 November 2022

வேராக இருக்கும் நல்லுறவு.

 வேராக இருக்கும் நல்லுறவு.

இவ்வுலகத்தில்
மூன்று வகையான
மக்கள் வாழ்கின்றார்கள்.
1.இலை மக்கள்
2.கிளை மக்கள்
3.வேர் மக்கள்
*1. இலையைப் போன்றவர்கள்:*
இவ்வகையான மக்கள் உங்கள் வாழ்க்கையில் இலையைப்போன்று வருவார்கள், உங்கள் வாழ்க்கையில் சில காலங்கள் மட்டும்தான் இருப்பார்கள், இவர்களை நாம் நம்புவது என்பது கடினம் இவர்கள் பலவீனம் ஆனவர்கள், இவர்களின் நிழலை மட்டும்தான் இவர்கள் நமக்குத் தருவார்கள்.
இவர்கள் இலையைப் போல தனக்குத் தேவையானவற்றைப் பெறும் வரை நம்மோடு இருப்பார்கள் தேவைகளைப் பெற்றுக்கொண்ட பின்போ அல்லது நம் வாழ்க்கையில் துன்பம்,சோதனைகள் வரும்போது இவர்கள் நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.
நாம் இவர்களிடம் கோபப்பட இயலாது, காரணம் இதுதான் அவர்களின் உண்மையான குணம்.
*2. கிளையைப் போன்ற மக்கள்:*
சிலர் நம் வாழ்க்கையில் கிளையைப் போல வருவார்கள்,
அவர்கள் மரத்தில் உள்ள கிளையைப் போன்றவர்கள்.இவர்கள் இலையை விட மிகவும் உறுதியானவர்கள், ஆனால் இவர்களிடம் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
இவர்கள் அதிகமான காலங்களில் நம்மோடு இருப்பார்கள், ஆனால் நம் வாழ்க்கையில் பெரிய கஷ்டம், துன்பங்கள் வரும்போது நம்மைவிட்டு போய்விடுவார்கள்.
இவர்கள் இலையை விட உறுதியானவர்களாக இருந்தாலும் நம் வாழ்க்கையிள் மிக இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மை விட்டுவிடுவார்கள்.
எனவே இவர்களின் பின்னால் சென்று நம் நம்பிக்கையை இவர்களின் மீது வைப்பதற்கு முன்பு நாம் இவர்களைப் பற்றி நன்குத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.சில நேரங்களில் இவர்களால் அதிகமான பாரங்களைச் சுமக்க இயலாது, எனவே இவர்களை நம்பி நம் சுமைகளை இவர்களின் மீது சுமத்துவது என்பது இயலாது, காரணம் இதுவே இவர்களின் இயல்பு ஆகும்.
*3. வேரைப் போன்ற மக்கள்:*
நம் வாழ்க்கையில் இதுபோன்ற மக்களை நாம் பெற்றுக்கொண்டால் நாம் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய பாக்கியத்தை புதையலைப்
பெற்று விட்டோம்.
வேரினைப் போன்று இவர்களை கண்டுக்கொள்வது என்பது மிகக் கடினம், காரணம் இவர்கள் தங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை.
இவர்கள் நம்மை தாங்கிக்கொண்டு நம்மை உறுதிப்படுத்தி நம்மை மகிழ்ச்சியாக வாழவைப்பதே இவர்களின் நோக்கம். இவர்கள் மிகவும் கீழே இருந்து மறைவாக இருந்து செயல்படுவார்கள், எனவே இவர்கள் நம்முடன் இருப்பது இவ்வுலகிற்குத் தெரியாது.நாம் நம் வாழ்க்கையில் மிகவும் கடினமான துன்பங்களை அனுபவிக்கும்போது இவர்கள் நம்மை தாங்கிக்கொண்டு நம்மோடு இருப்பார்கள்.
இவர்களின் வேலை நம்மை தாங்கிக்கொள்வது, பலப்படுத்துவது, எது வந்தாலும் நம்மைக் கைவிடாது நமமோடு இருப்பதே. ஒரு மரத்தில் அநேக இலைகள்,கிளைகள் இருக்கும் இவற்றை தாங்கிக்கொள்வது மிக குறைவாக உள்ள வேர்.
நம் வாழ்க்கையை உற்றுப் பார்போம் நமக்கு எத்தனை இலைகள், கிளைகள் உள்ளது,
மற்றவர்களின் வாழ்க்கையில் நீ என்னவாக இருக்கின்றாய்.
*உன் வாழ்க்கையில் வேராக உள்ளவர்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறு*. இவர்கள்
உன் வாழ்க்கையில் உண்மையாக இருப்பதற்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள்.
இலையைப் போன்ற மக்கள் இவற்றை மற்றவர்களுடன் பகிர மாட்டார்கள்,
அதனால் ஒன்றும் இல்லை.
நாம் நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்வோம்,
மற்றவர்களுக்கு நாம் நல்ல
உறவாக இருப்போம்.

No comments:

Post a Comment