Thursday 16 July 2020

''அறியாமை என்னும்.."

''அறியாமை என்னும்.."
அறியாமை அனைவருக்கும் பொதுவானது. யாரும் எதிலும் தலை சிறந்து விளங்குவதில்லை.
எல்லோருக்கும் எல்லாம் அறிந்து இருக்க முடியாது. உதாரணமாக
ஒரு அறிவியல் நிபுணர் அறிவியல் சம்பந்தமானக அறிந்து இருப்பார். ஆனால் வரலாற்றைப் பற்றி எந்தவிதமான புரிதலும் அவருக்குத் தெரியாது .
அதே போல் ஒருவர் வரலாற்றைப் பற்றி மிக நன்றாக அறிந்திருப்பார். இலக்கியம் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது .
பொதுவாழ்வில் ஈடுபட்டு இருப்பார்கள்.
ஆனால் கல்வியின் மகத்துவம் பற்றி எதுவும் தெரியாது.
ஆனால்,அவர்கள் நிறைய பொது செய்திகளை அறிந்து இருப்பார்.. ஆக.. அறியாமை என்பது நபருக்கு நபர் ஆளுக்காள் வேறுபடும்.
அறியாமை என்பது ஒரு பொருளின் உண்மைத் தன்மை அறியாமல் எது நல்லது, கெட்டது என்று தெரியாமல் இருப்பது தான்.. இந்த அறியாமை
இடத்துக்கு இடம் மாறுபடும்.. ஆனால், தன்னைப் பற்றியே அறிந்து கொள்ளாமல் இருப்பது தான் அறியாமையின் உச்சக்கட்டமாகும்.
அறியாமை, கல்வியறிவு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். நன்றாகப் படித்தவர்கள் கூட, இன்னமும் மூட நம்பிக்கைகளை உண்மை என நம்புகின்றார்கள்.
பழைமையான நம்பிக்கைகளில், வாழ்க்கைக்குத் தேவையான பல கருத்துகள் வாழ்க்கை விதிகளாக உண்டு.
ஆனால், எதையும் அறிந்தும் புரிந்தும் ஆராய்ந்தும் பார்த்து, அக்கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஏட்டுக் கல்வி கற்காதவர்கள் பலரிடம், அதிசயத்தக்க வகையில் நுண்ணறிவு காணப்படும்.அது, அனைவரிடம் இருக்கும் எனச் சொல்ல முடியாது.
ஏழை, எளியவர்களுக்கும் மட்டுமே, அறியாமை காணப்படுகின்றது என, நம்மவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த அறியாமை படித்தவர்களிடமும் இருக்கத் தான் செய்கிறது..
ஆம்.,நண்பர்களே..,
வெளிச்சம் இருட்டை உடனே அகற்றுகிறது. அறியாமை என்னும் இருட்டை நிரந்தரமாக அகற்றுவதற்கு அறிவு வெளிச்சமே தேவைப்படுகிறது.

No comments:

Post a Comment