Thursday 30 July 2020

துன்பமே துன்பப்படுமாம்.

துன்பமே துன்பப்படுமாம்.
*யாருக்கு இல்லை துன்பம?
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் துன்பத்தை அனுபவிக்கின்றன* மனிதனில் பிச்சைக்காரன் முதல் அம்பானி வரை துன்பத்தை அனுபவிக்கிறான். அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப துன்பங்களை அனுபவிக்கிறோம்.
அப்படியெனில் இன்பம் நல்லதா? துன்பம் நல்லதா ? உண்மையில் ஒருவனுக்கு துன்பமே நல்லது. ஏனெனில் இன்பம ஒருவனை பலவீனன் ஆக்கும். மாறாக துன்பம ஒருவனை பலவானாக மாற்றும். புண்பட புண்பட மனம் பண்படும்.
பகவான் கிருஷ்ணர் குந்தியிடம் உனக்கு வேண்டியதை கேள் என்றார். அதற்கு குந்தி , " கிருஷ்ணா , எனக்கு எப்போதும் துன்பத்தை மட்டும் தா " என்றாள். கிருஷ்ணர் ஏன் என்று கேட்க அதற்கு குந்தி தேவி,"கிருஷணா , இன்பத்தில் நான் உன்னை மறந்து விடுவேன். ஆனால் துன்பத்தில் நான் உன்னை ஒரு போதும் மறப்பதில்லை" என்றாள். அதிக துன்பத்தை அனுபவித்தவர்களில் குந்தி , ஹரிசந்திரன் போன்றோர் முக்கியமானவர்கள்.
யக்‌ஷன் தருமனை பார்த்து கேட்கிறான்," இந்த உலகத்தில் மிகவும் அற்பமானது எது? ". அதற்கு தருமர் ," கவலைப் படுவதே இந்த உலகில் மிகவும் அற்பமானது. ஏனெனில் அதனால் ஒரு பயனும் இல்லை" என்றார்.
ஆக 'கவலை' என்ற 'வலை'யில் சிக்கி தவிக்காதீர்கள். நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை மறவாமல், இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்து இறைவனை அடைய சிந்தித்து, பாடி , உணர்ந்து முயற்சி செய்யுங்கள்.
வள்ளுவர் கூறுகிறார் எவன் ஒருவன் துன்பத்தை கண்டு துன்பப் படுவதில்லையோ அவனைக் கண்டு அந்த துன்பமே துன்ப படுமாம்.

No comments:

Post a Comment