Tuesday 21 July 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வலிகள் தான்.
வாழ்க்கை என்றால் ஆயிரம் வலிகளும், வேதனைகளும், துன்பங்களும் இருக்கத் தான் செய்யும். வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்றால் இவற்றை எல்லாம் கடந்தால் தான் சிகரங்களை அடைய முடியும்..
வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது.
பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும் தான்..
வலி வந்த போது தான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடு தான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள்.
வலிகளால் நிரப்பப்பட்டது தான் இந்த வாழ்க்கை.
உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் போது தான் அழகான உடற்கட்டைப் பெற முடிகிறது.
இப்படித் தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக் கொள்ளும் போது தான் வளமான வாழ்க்கை வாழ முடியும்.
புகழ்பெற்ற ஓவியர் ஒனாயர்,’ரூமேட்டிஸம்’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
ஆனால் அவர் தன் கடும் கை வலியையும் பொருட்படுத்தாமல் ஓவியங்களை வரைந்து கொண்டு இருந்தார்..
அவருடைய நண்பர்கள், இந்த வயதான காலத்தில் வலியின் உச்சத்தில் நீங்கள் வரைவது அவசியமா..? பேசாமல் ஒய்வு எடுத்துக் கொள்வது தானே.? என்றார்கள்.
அதற்கு ஓவியர் ஒனாயர் சொன்னார்,
வலி நீடிப்பது கொஞ்ச நேரம் தான்.ஆனால் வரைவதன் இன்பமோ பல நாட்கள் நீடிக்கும்.. வரைகிற ஓவியமோ காலம் கடந்தும் நீடிக்கும்.. என்றார்..
வலி பொறுக்க முடியவில்லை என்றால் நீங்கள் முன்னேறவில்லை என்று அர்த்தம்.
நீங்கள் உயரும் போது , உங்களின் இன்றைய நிலையை விட்டு உயர்ந்த நிலைக்குச் செல்லும் போது , புதுப்புது பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.
அவற்றை சமாளிக்க வேண்டும். அப்போது தான் உயர்வு அடைய முடியும்.
பெரிய நிலையை அடைந்தவர்கள், உயர்ந்தவர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.
எவ்வளவு வலிகளை தாங்கி வந்திருப்பார்கள் என்று தெரியும். தூக்கம் தொலைத்து, பசி, தாகம் மறந்து, பல சுகங்களை தியாகம் செய்து வந்து இருப்பார்கள்
ஆம்.,நண்பர்களே..,
நாம் இலட்சியத்தை அடைய வேண்டுமானால் சிறிய வலிகளையும், வேதனைகளையும், துன்பங்களையும் பொறுத்துத் தான் ஆக வேண்டும்..
வலிகளையும், இடையுறுகளையும் தாண்டிச் செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்.

No comments:

Post a Comment