Thursday 30 July 2020

எதிர்க்கட்சி தலைவர் இடத்தில் இருப்பவரோ மீடியாக்களோ என்ன செய்திருக்கவேண்டும்?

எதிர்க்கட்சி தலைவர் இடத்தில் இருப்பவரோ மீடியாக்களோ என்ன செய்திருக்கவேண்டும்?
அப்பன் சாவுக்கு போவதற்கே இ-பாஸ் வாங்க லஞ்சம் குடுத்தவன். மனைவி பிரசவத்திற்கு போக பாஸ்கிடைக்காதவன்னு, பாதிக்கப்பட்ட, அத்தனை பேரையும் திரட்டி தினமும் அம்பலத்தில் ஏற்றி அரசின் யோக்கியதையை வெளுத்திருக்க வேண்டும்..
ஆனா எதிர்க்கட்சியே சாத்தான்குளம் உதயநிதின்னு டுவிஸ்ட் ஆயி நிக்குது, மீடியாக்கள் பத்தி சொல்லத் தேவையே இல்லை. ரஜினி வீட்டு வேலைக்காரன் தும்மினாக்கூட விவாதம் நடத்துறதுல மும்முரம்..
என் நண்பனின் தாயார் படுகொலையானார் மகாபலிபுரத்தில் இருக்கும் அவன் காஞ்சிபுரம் வருவதற்குள் படாதபாடு விட்டான்.. வீடியோவுல டெட்பாடி காட்டி போலீஸ்காரர் கெஞ்சி கதறி பல மணி நேரம் கழிச்சி வந்தான் ..எது, வெறும் 60 கிலோ மீட்டர்.
என் உறவினர் பையன் இறந்துவிட்டான். 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செய்யாரில் இருந்து அவனின் தாயாரை அழைத்துவர அனுமதி கேட்டு தாசில்தார் பின்னாடி மூன்று மணிநேரம் சுற்றினார்கள். செத்துப்போன புள்ளைக்காக அந்தம்மா அழுவாங்களா, இல்லை தாசில்தார் பின்னாடி அலைவாங்களா?
இது மாதிரி எத்தனை சம்பவங்கள்.. ஏராளமானோரின் கண்ணீரை பார்த்து நொந்து போய்தான் ஆரம்பத்தில் இருந்து கத்திக்கொண்டி ருக்கிறோம். ஆனால் இ-பாஸ் கொடுப்பதை கொள்ளையாகவே ஆக்கிக்கொண்டுள்ளனர் அதிகார வர்க்கம்.
இன்னும் தொற்று பரவல் அதிகமாகும்போது தாலுகா விட்டு தாலுகா போவதற்கும் இ-பாஸ் கொண்டுவருவார்கள் இந்த அறிவாளிகள் என்று நினைக்கிறோம்.
ஆனா பாருங்க எதிர்க்கட்சியும் மீடியாக்களும் எதுவுமே நடக்கா மாதிரி வேடிக்கை பார்ப்பாங்க..

No comments:

Post a Comment